தமிழர்களின் பாரம்பரிய ஆன்மீக உரிமைகளை திமுக தடுக்கிறது என்று குற்றஞ்சாட்டி இருக்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில், பன்னெடுங்காலமாக கந்தசஷ்டி விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். திருச்செந்தூரை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில், குழந்தை பிறக்கவும் மற்ற பல காரணங்களுக்காகவும், சஷ்டி விழா காலத்தில், கோவிலுக்குள்ளேயே வந்து தங்கியிருப்பதாக, பக்தர்கள் வேண்டுதல் வைப்பது வழக்கம்.
கடந்த மூன்றாண்டு காலமாக, கொரோனா காலக்கட்டத்தில், திருச்செந்தூர் கோவிலுக்குள் விழாக்கள் நடைபெறவில்லை. தற்போது, இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 25 அக்டோபர் காலை 6 மணிக்கு தொடங்கி. மாலை 6 மணி வரை சூரசம்ஹாரத்துடன் நிறைவுபெறும் இந்த விழாவில் பெருந்திரளான மக்கள் பங்கு கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க..குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..! 2 நாட்களுக்கு டாஸ்மாக் கிடையாது - அதிரடி உத்தரவு!
கடந்த மூன்று ஆண்டுகளாக, வேண்டுதலை நிறைவேற்ற முடியாமல் இருந்த பக்தர்கள், இந்த ஆண்டாவது கோவிலுக்குள், தன்னுடைய சஷ்டி வேண்டுதலை நிறைவேற்ற, ஆவலுடன் இருக்கும் வேளையில், மராமத்து பணியை காரணம் காட்டி, சுப்பிரமணிய சாமி திருக்கோவில் நிர்வாகக்குழு கோவிலுக்குள் பக்தர்கள் தங்கியிருப்பதை தடைசெய்துள்ளது. இதுதொடர்பாக பக்தர்கள் குழுவினர், மாவட்ட ஆட்சியாளரையும், மாநில அறநிலையத்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து தங்கள் மனக்குறைகளை தெரிவித்தும், பக்தர்களை அனுமதிக்கக் கூடாது என்பதில், தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தெரிகிறது.
மராமத்து பணிக்காக தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்று அரசு காரணத்தை கூறினாலும், இதுபோல தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத் தேர் பவனியும், லட்சார்ச்சனை நிகழ்ச்சியும், தாராபிஷேகம், ஹோமங்கள் ஆகியன கடந்த ஒன்றரை / இரண்டு ஆண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படி திருச்செந்தூர் திருக்கோவிலின், ஆன்மீகச் சடங்குகளை, ஒன்றொன்றாக நிறுத்திக் கொண்டு வருவதற்கு என்ன காரணம் ?
இதையும் படிங்க..பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா ? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் நியூஸ்.!
அரசு மௌனம் காப்பதால் இதில் ஏதோ மர்மம் இருப்பதாக தெரிகிறது? பக்தர்களின் ஆன்மீக உணர்வுகளுக்கும், பாரம்பரிய மரபுகளுக்கும் எதிராக திமுக அரசு தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவது உள்நோக்கம் கொண்ட செயலாகும். ஆக பக்தர்கள் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்ற, தமிழக அரசு அனுமதி மறுப்பதும், பக்தர்களின் ஆன்மீக உரிமையில் அரசு தலையிடுவதும், வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
உடனடியாக தமிழக அரசு, நடைபெற இருக்கும் கந்தசஷ்டி விழாவில் கோவிலுக்குள் தங்கியிருந்து, பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும். வேண்டுதல் நிறைவேற்றக் காத்திருக்கும் பக்தர்களின் பாரம்பரிய உரிமையை பறிக்காமல், அவர்களை கோவிலுக்குள் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க..23ம் புலிகேசி போல காங்கிரஸ் கட்சி நிலைமை இருக்கு.. பிறந்தநாளில் புலம்பிய கே.எஸ் அழகிரி!