யாரும் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வராதீங்க... க.அன்பழகன் உடல்நலன் பாதிப்பால் மு.க. ஸ்டாலின் அப்செட்!

Published : Feb 27, 2020, 09:27 PM ISTUpdated : Feb 27, 2020, 09:28 PM IST
யாரும் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வராதீங்க... க.அன்பழகன் உடல்நலன் பாதிப்பால் மு.க. ஸ்டாலின் அப்செட்!

சுருக்கம்

"கழக முன்னணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் என்மீது அன்பு கொண்ட நண்பர்கள் யாரும் மார்ச் 1 அன்று என்னை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்ல வரவேண்டாம் என பணிவன்புடன் வேண்டுகிறேன். தமிழர் நலன் காக்க தன்னை ஒப்படைத்துக் கொண்ட பேராசிரியர் பெருமகனார் நலம் பெற அனைவரும் தங்களது உள்ளார்ந்த நல்லெண்ணத்தை வெளிப்படுத்திக் கொள்வோம்.” என அறிக்கையில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.  

திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய பிறந்த நாளான மார்ச் 1 அன்று வாழ்த்து தெரிவிக்க யாரும் வர வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிசித்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 98 வயதான அன்பழகன். இந்நிலையில் மார்ச் 11 அன்று தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலி கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 “தமிழனத்தின் நிரந்தரப் பேராசிரியரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் எனது பெரியப்பாவுமான பேராசிரியர், வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். முக்கால் நூற்றாண்டு காலம், இந்த இனத்துக்கும் மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் திராவிட இயக்கத்துக்கும் பெருந்தொண்டாற்றிய பேராசிரியப் பெருமகார் உடல் நலிவுற்றிருக்கும் இந்த சூழலில் மார்ச் 1ம் நாள், நான் எனது பிறந்தநாளை கொண்டாடும் மனநிலையில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்..


எனவே, கழக முன்னணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் என்மீது அன்பு கொண்ட நண்பர்கள் யாரும் மார்ச் 1 அன்று என்னை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்ல வரவேண்டாம் என பணிவன்புடன் வேண்டுகிறேன். தமிழர் நலன் காக்க தன்னை ஒப்படைத்துக் கொண்ட பேராசிரியர் பெருமகனார் நலம் பெற அனைவரும் தங்களது உள்ளார்ந்த நல்லெண்ணத்தை வெளிப்படுத்திக் கொள்வோம்.” என அறிக்கையில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

திமுக ஆமை..! நாங்கள் குதிரை..! அதிமுக பற்றி ரகுபதிக்கு என்ன கவலை...? ஜெயக்குமார் பதிலடி..!
தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ரத்து..! எம்.பி.க்களிடம் வழங்கப்பட்ட புதிய திட்டதின் வரைவு மசோதா நகல்..!