ரோஜா இருக்கும்போது முள்ளும் இருக்கும் - டொனால்டு டிரம்ப் (அமெரிக்க அதிபர்!

By Vishnu Priya  |  First Published Feb 27, 2020, 6:27 PM IST

நாட்டின் உயர்ந்த தத்துவங்களுக்கு மோடி அரசு முடிவு கட்டி வருகிறது. பேராபத்து நம்மை சூழ்ந்து கொண்டுள்ளது. நாம் யாரையும் எதிர்த்துப் போராடவில்லை. நம்மை பாதுகாத்துக் கொள்ளத்தான் போராடுகிறோம். 


தமிழக இளைஞர்களே பிச்சை எடுங்கள்!: சிறப்பாய் வழிகாட்டும் அந்த தலைவர் யார் தெரியுமா?

*    இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மிகப்பெரிய பிரச்னைதான் காஷ்மீர் விவகாரம். ரோஜா இருக்கும்போது முள்ளும் இருக்கும். இந்த விஷயத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் குறைவதற்கு, தேவைப்பட்டால் மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளேன். பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் நல்ல நட்பு உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க அவர்களும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 
-    டொனால்டு டிரம்ப் (அமெரிக்க அதிபர்)

Tap to resize

Latest Videos

undefined

*    நாட்டின் உயர்ந்த தத்துவங்களுக்கு மோடி அரசு முடிவு கட்டி வருகிறது. பேராபத்து நம்மை சூழ்ந்து கொண்டுள்ளது. நாம் யாரையும் எதிர்த்துப் போராடவில்லை. நம்மை பாதுகாத்துக் கொள்ளத்தான் போராடுகிறோம். 
-    சிவா (தி.மு.க. ராஜ்யசபா எம்.பி.)

*    கடலூர், நாகப்பட்டிணத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த பெட்ரோலிய முதலீட்டு மண்டல அரசாணைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அறுபதாயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது. விவசாயிகளையும், விவசாய தொழிலையும் மேம்படுத்த தமிழக அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கையை பாராட்டுகிறேன். 
-    சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி)

*    ஊடகங்கள் தொடர்பாக தி.மு.க.வின் எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கீழ்த்தரமாக பேசினார். அவரை ஊடகங்கள் கண்டிக்கவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள்  பற்றியும் ஆட்சேபகரமாக பேசியுள்ளார். அது பற்றியும் ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை. 
-    எடப்பாடி பழனிசாமி (தமிழக முதல்வர்)

*    கம்யூனிஸ்ட் அறிக்கையை வாசித்தால் மட்டும் போதாது. மகாத்மா காந்தி, ராஜாஜி, கருணாநிதி, காமராஜர் என பலரும் இந்த அறிக்கையை வாசித்துள்ளனர். எனினும் களத்தில் இறங்கி செயல்படுவதன் மூலம்தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆக முடியும். 
-    ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் ராஜ்யசபா எம்.பி.)

*    பத்தாண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஆட்சியை விட்டு இறங்கியபோது, ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. இப்போது நான்கு லட்சம் கோடியாக உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதை எப்படி சமாளிக்க போகிறோம்னு தெரியவில்லை. ஆனாலும் ஸ்டாலின் சமாளித்துவிடுவார். 
-    துரைமுருகன் (தி.மு.க. பொருளாளர்)

*    பெண்கள் எந்த போராட்டத்தில் அதிகம் பங்கெடுக்கிறார்களோ அந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். அதை யாராலும் தடுக்க முடியாது. இன்று இந்தியாவில் ஏராளமான பெண்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். 
-    பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்)

*    மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவு, அ.தி.மு.க. அரசின் டாஸ்மாக் வியாபாரம் போன்றவற்றால் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் விசைத்தறி தொழில் மிக கடுமையாக பாதித்துள்ளது. இதனால் ஏற்பட்ட கொடிய வறுமையை எதிர்கொள்வதற்காக பெண்கள் தங்கள் கருமுட்டையை விற்பனை செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி சிறுநீரகத்தை விற்பனை செய்யும் அவலமும் தொடர்கிறது. 
- மு.க.ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)

*    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அறவழியில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இந்தச் சட்டம் பற்றி தவறான போர்வையில் பிரசாரம் செய்யப்படுகிறது. நமது சமயத்துக்கு இடையூறு ஏற்படும் காலங்களில், கோவில் நிர்வாகங்கள்தான் இத்தகைய நிகழ்வுகளை நடத்த வேண்டும். 
-    மருதாசல அடிகளார் (பேரூர் ஆதீனம்)

*    மதவாதிகள் மாதந்தோறும் தங்கள் சம்பளத்தில் பத்து சதவீதத்தை கோயிலுக்கு கொடுக்கின்றனர். அது போல தி.க.வினர் தங்கள் வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை நம் அமைப்பிற்கு தரலாமே! தங்கள் வேலை முடிந்ததும், இளைஞர்கள் பொதுமக்களிடம் துண்டு ஏந்தலாமே. 
-    கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்)

:    விஷ்ணுப்ரியா

click me!