விஜயகாந்த்தை அனுப்புறீங்களா? எம்.பி. சீட் கொடுக்குறோம்: பிரேமலதாவை பதறவிடும் அ.தி.மு.க.

By Vishnu PriyaFirst Published Feb 27, 2020, 6:24 PM IST
Highlights

ஆனால் விஜயகாந்தை வேட்பாளராக்கி, டெல்லிக்கு அனுப்புறதா இருந்தால் மட்டும் தர்றோம். ஏன்னா அவருக்குதான் அரசியல்ல மதிப்பு. மனைவி, மச்சான், மகனெல்லாம்  பார்த்து மக்கள் உங்க கட்சிக்கு ஓட்டு போடலை. 
 

கபடி விளையாட்டில் எண்ணிக்கைக்காக ஒரு சிலரை ‘வீரர்கள்’ எனும் பெயரில் ஒவ்வொரு டீமிலும் டம்மியா வெச்சிருப்பாங்க. கிட்டத்தட்ட தே.மு.தி.க.வை அப்படித்தான் வெச்சிருக்குது அ.தி.மு.க. பா.ம.க.விடம் காட்டுற பணிவிலும், பயத்திலும், தாராளத்திலும் கால்வாசியை கூட கேப்டன் கட்சிக்கு காட்டுறதில்லை. இதைவிட பெரிய அவமானம் என்ன வேணும் பிரேமலதா, சுதீஷுக்கு?: என்று விவரமாக வறுத்தெடுக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். என்ன பிரச்னை?கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள அ.தி.மு.க.வுக்கு எந்த விருப்பமும் இல்லை. அதேபோ ‘இனி தே.மு.தி.க.வுக்கு சரிவு, சரிவுதான். எந்த காலத்திலும் எழுச்சியே இல்லை.’ என்று விஜயகாந்தை முகத்துக்கு நேராக பார்த்து ஜெயலலிதா திட்டியதால் அவர்களுக்கு ஆளுங்கட்சி கூட்டணிக்கு செல்ல விருப்பமே இல்லை. ஆனால் டெல்லி லாபி விரும்பியதால் கூட்டணி உருவானது. 

அந்த கூட்டணி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவ்வளவு மோசமாக தோற்ற பின்னும் இன்னமுமே தொடர்கிறது. பா.ம.க.வாவது தங்களின் அன்புமணிக்கு ஒரு ராஜ்யசபா சீட் வாங்கிக் கொண்டு, அவரை டெல்லிக்கு அனுப்பிவிட்டது. பா.ம.க. கேட்ட அதே வாய்ப்பை அப்போதே பிரேமலதா கேட்டார். ஆனால் எடப்பாடியாரும், பன்னீரும்  ‘போகட்டும் பார்ப்போம்.’ என்றார்கள். ஆனால் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் அதுயிதுவென சில தேர்தல்கள் முடிந்துவிட்டன. ஆனால் தே.மு.தி.க. பெருமைப்படும் வகையில் இந்த கூட்டணியில் எதுவுமே கிடைக்கவில்லை. 
இதனால் டென்ஷனான பிரேமலதா, திடீரென ஒரு நெருக்கடியை அ.தி.மு.க. தலைமைக்கு கொடுக்க துவங்கியுள்ளார். வரும் மார்ச் மாதம் தமிழகத்தை சேர்ந்த ஆறு ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிந்து, புதிதாக ஆறு பேர் மீண்டும் தேர்வாக இருக்கின்றனர்.

 

இதில் மூன்று பேர் அ.தி.மு.க. சார்பாக தேர்வாகிறார்கள். இதில் ஒரு எம்.பி. பதவியைதான் தங்கள் கட்சிக்கு வேண்டுமென்று பிரேமலதா தொடர்ந்து கேட்கிறார். ஆனால் நாடாளுமன்ற தேர்தல், வேலூர் தொகுதி தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் மிக கடுமையான சரிவுகளையும், ஓரளவு வெற்றியையுமே பெற்றிருப்பதால் தன்னை பலவீனமாக்கும் எந்த செயலையும் செய்ய தயங்குகிறது அ.தி.மு.க.  மூன்று எம்.பி.க்கள் தங்களுக்கு மீண்டும் கிடைத்தால் டெல்லியில் தங்கள் பலம் அப்படியே தொடருமென்பது எடப்பாடியாரின் எண்ணம். அதனால் தே.மு.தி.க.வுக்கு அந்த ஒரு சீட்டை விட்டுத் தர மனமில்லை. அதனால் பிரேமலதா சார்பாக தங்களிடம் பேச வந்த தே.மு.தி.க. மாநில நிர்வாகிகளிடம்  ’சீட் தந்தால் யாரை எம்.பி.யாக்குவீங்க?’ என்று அ.தி.மு.க. தரப்பு கேட்க, ‘அண்ணி பிரேமலதா இல்லாத பட்சத்தில் அவங்க தம்பி சுதீஷ். கேப்டன் ஆசைப்பட்டா அவரோட மூத்த பையனை கூட எம்.பி.யாக்கிடுவோம்!’ என்று சொல்லி இருக்கிறார்கள். 

உடனே பெரிதாய் சிரித்துக் கொண்ட அ.தி.மு.க. தரப்பு “உங்க தலைவர் அந்த காலத்துல கருணாநிதியை வாரிசு அரசியல்! வாரிசு அரசியல்!ன்னு தான் சொல்லி திட்டினார். அத்தனைக்கும் அதிகாரத்துல இருந்துச்சு தி.மு.க. ஆனா இன்னைக்கு உங்க கட்சி இப்படி எந்த பவரும் இல்லாம இருக்கையிலேயே நீங்களும் வாரிசைதான் வளர்த்து விடுறீங்க!” என்றிருக்கிறார்கள்.  இதில் கடுப்பான தே.மு.தி.க.வினர் ‘சட்டமன்ற இடைத்தேர்தல்ல நீங்க ஜெயிக்க எங்க ஓட்டுக்கள் பெருசா கைகொடுத்ததை மறக்காதீங்க!’ என்றிருக்கின்றனர். இதில் எரிச்சலான அ.தி.மு.க., ‘ சரிங்க விவாதம் பண்ணி, பேச்சையும் பிரச்னையையும் வளர்க்க வேணாம். மூணுல ஒரு எம்.பி. சீட் உங்க கட்சிக்கு தர்றோம். ஆனால் விஜயகாந்தை வேட்பாளராக்கி, டெல்லிக்கு அனுப்புறதா இருந்தால் மட்டும் தர்றோம். ஏன்னா அவருக்குதான் அரசியல்ல மதிப்பு. மனைவி, மச்சான், மகனெல்லாம்  பார்த்து மக்கள் உங்க கட்சிக்கு ஓட்டு போடலை. 

 

கேப்டன் டெல்லிக்கு போறதா இருந்தா சொல்லுங்க. இல்லேன்னா விடுங்க.”  என்று ஒரே போடாக போட்டார்களாம். வீட்டை விட்டு தனியாக வெளியே வர இயலாத அளவுக்கு தளர்ந்திருக்கிறார் கேப்டன். இது அ.தி.மு.க. தலைமைக்கு நல்லாவே தெரியும். ஆனாலும் இவங்க  இப்படி சொல்றது கேப்டனை சீண்டிப் பார்க்கிறதுக்கா இல்ல, டெல்லிக்கு போக வாய்ப்பில்லாத விஜயகாந்துக்கு தர்றோம்னு சொல்லி எஸ்கேப் ஆகுறதுக்காக சொல்றாங்களான்னு புரியலையே! என்றபடி நிர்வாகிகள் புலம்பியபடியே வெளியே வந்துள்ளனர். தகவல் பிரேமலதாவின் கவனத்துக்குப் போக, அதிர்ந்தும், ‘நம்ம கட்சி நிமிர்ந்து உட்கார ஒரு வாய்ப்பு இல்லையா!’ என்று பதறியும் போனவர் ”கேப்டனை எழுந்து நடக்க வைக்கிறேன் நல்லபடியா. அதுக்குப் பிறகு தமிழக முதல்வர் பதவியே அவரை தேடி தானா வரும்.” என்றாராம். 
ஒரு பொருளாளரின் சபதம்!

 

 

click me!