இந்துக்கள்னா இளிச்சவாயனுங்களா மிஸ்டர் எடப்பாடி? அ.தி.மு.க.வுக்கு வைக்கிறோம் பெரிய ஆப்பா!: வெடிக்கும் வேதாந்த

By Vishnu PriyaFirst Published Feb 27, 2020, 6:10 PM IST
Highlights

தமிழ்நாட்டில் கிராமக் கோயில் பூசாரிகள் ஆறு லட்சம் பேர் இருக்காங்க. இவங்களைக் கண்டுக்குறதே இல்லை அரசாங்கம். கோயில்களை வியாபார ஸ்தலமாக்கி, அரசுக்கு வருவாயை குவிக்கும் இவர்கள், கிராம கோயில் பூசாரிகளின் வறுமையை போக்கிட எதுவும் செய்யலை.
 

குடியுரிமை சீர்திருத்த சட்டத்தின் பஞ்சாயத்தால் இஸ்லாமியர் வாக்கு வங்கி மிக முழுவதுமாக தங்கள் கைகளை விட்டு வெகுதூரம் போய்விட்டது! என்பதே அ.தி.மு.க.வின் பெரும் தலைவலி. ’இந்த சட்ட மசோதாவால் இஸ்லாமியர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. பாதிக்கப்பட்ட ஒரு முஸ்லீமை காட்டுங்க பார்க்கலாம். சும்மா பேசிட்டு!’ என்று சட்டமன்றத்தில் எடப்பாடியர் ஏக சவுண்டு விட்டு அதை சத்தமன்றமாகவே ஆக்கிவிட்டார்.  ஆனாலும் எந்த பலனுமில்லை.  விளைவு, சமீபத்தில் இஸ்லாமியர்களுக்கு 110 விதியின் கீழ் மிக கணிசமான சலுகைகளை அள்ளிக் கொடுத்தார் எடப்பாடியார்.

குறிப்பாக பள்ளிவாசலில் பணியாற்றும் மத குருக்களான உலமாக்களுக்கு மாத ஊதியத்தை டபுளாக்கி மூவாயிரமாக அறிவித்தார்! அவர்கள் இரு சக்கர வாகனம் வாங்கிட கால் லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படுமென அறிவித்தார். அத்தோடு இல்லாமல் ஹஜ் பயணிகளுக்கு,  சென்னையில் தங்கிட பதினைந்து கோடி ரூபாய் செலவில் தங்கும் இல்லம் அமைக்கப்படுமென அறிவித்தார்.  

இம்பூட்டு சலுகைகள் அறிவித்தும், சிஏஏ விஷயத்தில் தமிழக அரசை முறைத்துக் கொண்டு இருக்கும் இஸ்லாமியர்களின் பார்வையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இஸ்லாமியர்களுக்கு இவ்வளவு அள்ளிக் கொடுத்த எடப்பாடியார், அ.தி.மு.க. அரசு மீது காண்டாகியிருக்கிறார்கள் இந்து அமைப்பினர். குறிப்பாக கிராமக் கோயில் பூசாரிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.கிராமக் கோயில் பூசாரிகள் பேரவையின் நிறுவனரான வேந்தாந்தம் “தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் ஆறு சதவீதம், கிறுத்தவங்க ஏழு சதவிதம்தான் இருக்காங்க. மீதி இருக்கிற எண்பத்து ஏழு சதவிதம் பேர் இந்துக்கள்தான். ஆனால் இந்த மைனாரிட்டிகளின் கண்ணில் சுண்ணாம்பு வெச்சுடார் எடப்பாடியார்.  தமிழ்நாட்டில் கிராமக் கோயில் பூசாரிகள் ஆறு லட்சம் பேர் இருக்காங்க. இவங்களைக் கண்டுக்குறதே இல்லை அரசாங்கம். கோயில்களை வியாபார ஸ்தலமாக்கி, அரசுக்கு வருவாயை குவிக்கும் இவர்கள், கிராம கோயில் பூசாரிகளின் வறுமையை போக்கிட எதுவும் செய்யலை. 

 இந்து கோயில்கள் மேலே ஏதோ மிகப்பெரிய வெறியோட நடந்துக்குற மாதிரிதான் அரசாங்கங்கள் பண்ணுது. இந்து கோயில்களில் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு எட்டு ரூபாய் வசூல்  பண்றாங்க. ஆனால் மசூதி மற்றும் சர்ச்களில் ஒரு யூனிட்டுக்கு இரண்டு ரூபாய் ஐம்பது பைசாதான் வசூல் பண்றாங்க. ஏன் இந்த பாரபட்சம்?  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருபத்து நாலு வருஷங்களுக்கு முன்னாடி ‘கிராமக் கோயில் பூசாரிகளுக்கு மாத ஊதியமாக நானூறு ரூபாய் வழங்கப்படும்’ என அறிவித்து அதை கொடுத்தார். அது இத்தனை வருஷத்துல வெறும் ஆயிரம் ரூபாயாகதான்  உயர்ந்திருக்குது. ஆனா அதுவும் பலருக்கு கிடைக்கிறதில்லை.

சம்பளத்தை அதிகப்படுத்துங்க, எல்லா கிராம கோயில் பூசாரிகளுக்கும் சம்பளம் கொடுங்க!ங்கிறது உள்ளிட்ட பல கோரிக்கைகளை அ.தி.மு.க. அரசிடம் வெச்சுட்டோம். எந்த பலனுமில்லை. ஆனால், எந்த கோரிக்கையையும் வைக்காத முஸ்லிம்களை தேடிப்போயி உதவி பண்ணியிருக்காங்க, சலுகைகளை அள்ளிவீசியிருக்கார் முதல்வர். இதெல்லாமே அந்த சமுதாயம் அரசுக்கு கொடுக்கும் போராட்ட மிரட்டலின் விளைவு. இருக்கட்டும்” என வெடித்துள்ளார். 

இதற்கிடையில் உலமாக்களின் மாத சம்பளம் இரட்டிப்பு, டூவீலர் வாங்க கால் லட்சம் நிதி! இதெல்லாம் இந்து கிராம கோயில்களின் பூசாரிகளை செம்ம டென்ஷனாக்கிவிட்டது. விளைவு பல மாவட்டங்களில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கூட்டம் போட்டு பேசி சில முடிவுகளை எடுத்துள்ளனர்.‘எவ்வளவு புறக்கணிச்சாலும் நாம அவங்களுக்கு சாதகமா ஓட்டு போடுவோம்னு அ.தி.மு.க. நம்புது. இனி அப்படி நடக்க கூடாது. உலமாக்களை விட அதிகமா அல்லது அவங்களுக்கு நிகரா நமக்கு சலுகைகளை உடனடியா அறிவிக்கணும். இல்லேன்னா எதிர்வரும் அத்தனை தேர்தல்களிலும் அ.தி.மு.க.வுக்கு வைப்போம் பெரிய ஆப்பா!” என்று முடிவெடுத்துள்ளனர். 
மை காட்!

click me!