ராகுலை நம்பி இனி பிரயோஜனம் இல்லை...!! விரக்தியின் உச்சத்தில் காங்கிரஸ்காரர்கள்... சோனியாவுக்கு அழைப்பு...

By Ezhilarasan BabuFirst Published Feb 27, 2020, 5:37 PM IST
Highlights

நான் மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியின் பல மூத்த தலைவர்களும் இதே கருத்தைதான் சொல்கின்றனர்.    நான் உட்பட பெரும்பாலானோர் சோனியாகாந்தியின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் . 

சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டுமென மனிஷ் திவாரி எம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார் .  நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட படு தோல்வி காரணமாக தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் தற்போது மனிஷ் திவாரி இவ்வாறு  கோரிக்கையை முன்வைத்துள்ளார் கடந்த  மீண்டும் பதவி ஏற்கும்படி மூத்த தலைவர்கள் தொடர்ந்து  ராகுலுக்கு வலியுறுத்தி வந்த நிலையிலும் அவர் அதை  ஏற்க மறுத்துவிட்டார் .  இதனால் காங்கிரஸ் கட்சியின்  தலைவர் பதவி என்பது இதுவரை காலியாகவ இருந்து வருகிறது.  இந்நிலையில் தற்காலிக தலைவராக சோனியா காந்தியை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   விரைவில் புதிய தலைவரை அறிவிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு வருகிறது . 

மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என தெரிகிறது .  ராகுல் காந்தி மீண்டும் தலைவராக வேண்டும் என்று காட்சிநில் பலரும் வற்புறுத்தி வருகின்றனர் .  ஆனால் கோரிக்கையை ஏற்க ராகுல் மறுத்து வருகிறார் .  மீண்டும் ராகுல் தலைவர் பதவிக்கு சம்மதிப்பாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது .   எனவே , அடுத்த தலைவராக யாரை நியமிப்பது என்ற குழப்பம் காங்கிரஸ் கட்சியில் நிலவி வருகிறது.   காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மனீஷ் திவாரி இது குறித்து  கூறியதாவது :-  இந்த சூழலில் காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி தலைவராக நீடிப்பதையே விரும்புகிறேன் இல்லாவிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு வேறு வழி இல்லை .  நான் மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியின் பல மூத்த தலைவர்களும் இதே கருத்தைதான் சொல்கின்றனர்.    நான் உட்பட பெரும்பாலானோர் சோனியாகாந்தியின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் . 

நான் நாற்பது ஆண்டுகள் இதே கட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகிறேன் ,  மாணவர் காங்கிரஸ் தொடங்கி,  இளைஞர் காங்கிரஸ் என பல்வேறு அமைப்புகளை கவனித்து வருகிறேன்,   அத்துடன் மூத்த தலைவர்களுடனும்  பணியாற்றிவருகிறேன்,  தனிப்பட்ட முறையில் அவர்களிடம்  பேசியதில்,   சோனியா காந்தியே தலைவராக நீடிப்பது சிறந்தது என கூறுகின்றனர்.   காங்கிரஸ் பல்வேறு சிக்கலில் இருந்தபோது திறம்பட பணியாற்றி கட்சியை  மீட்டவர் சோனியா,  அவரின் அறிவு மதிநுட்பம் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் .  ராகுல் காந்தி அவராகவே தனது பதவியை ராஜினாமா செய்தார்.  அவரை பலமுறை வற்புறுத்தியும் அவர் தலைவர் பதவி ஏற்க மறுக்கிறார் .  ராகுல் தலைவராக இருந்தபோது சிறப்பாகவே பணியாற்றியிருக்கிறார்,  ஆனால் அவர் விரும்பாத போது அதில்  நாம் ஒன்றும் செய்ய முடியாது என மனிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.  

 

 

click me!