உண்மையிலேயே நீங்க அப்படினா.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லுங்க.. ஸ்டாலினை சீண்டும் காடேஸ்வரா..!

Published : Jul 16, 2022, 08:32 AM ISTUpdated : Jul 16, 2022, 08:35 AM IST
உண்மையிலேயே நீங்க அப்படினா.. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லுங்க.. ஸ்டாலினை சீண்டும் காடேஸ்வரா..!

சுருக்கம்

சர்ச் சொத்து கிறிஸ்தவர்களுக்கும், மசூதி சொத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமாகிறது. ஆனால், இந்து கோவில்கள் வருமானத்தை அரசு எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தில் நிறைய கோவில்கள் கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளன. 

அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோவில்களில் மக்களே கும்பாபிஷேகம் செய்ய முன்வந்தாலும் அதற்கும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கிறது என காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார். 

இந்துக்களின் உரிமை மீட்பு என்ற தலைப்பில் பிரசாரப் பயணத்தை நடத்தி வருகிறார். அந்த பயணத்தை கடந்த 28-ம் தேதி திருச்செந்தூரில் தொடங்கி ஜூலை 31-ம் தேதி சென்னையில் நிறைவு செய்கிறார். இந்நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 

இதையும் படிங்க;- செந்தில் பாலாஜி கையில் 40 எம்.எல்.ஏக்கள்.. மகாராஷ்டிராவை போல் தமிழகத்தில் அது நடக்கும்? அலறவிடும் பிரமுகர்.!

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தமிழகத்தில் இந்து விரோத ஆட்சி நடக்கிறது. சர்ச் சொத்து கிறிஸ்தவர்களுக்கும், மசூதி சொத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமாகிறது. ஆனால், இந்து கோவில்கள் வருமானத்தை அரசு எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தில் நிறைய கோவில்கள் கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளன. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ராஜகோபுரம் பணிகள் பாதியில் நிற்கிறது. கோவில் வருவாயை செலவு செய்தாலே, கும்பாபிஷேகம் பணிகளை செய்து முடிக்கலாம். ஆனால், அதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக மக்களை ஏமாற்றி வருகின்றனர். 

தமிழகத்தில் நாங்கள் மதசார்பற்ற அரசு நடத்துவதாக கூறும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு உண்மையில் மதசார்பின்மை அரசு நடத்துவதாக இருந்தால் வரும் விநாயகர் சதுர்த்திக்கு இந்து மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோவில்களில் ஆகம விதிகளை முறையாக பின்பற்றப்படுவதில்லை. மேலும் அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோவில்களில் மக்களே கும்பாபிஷேகம் செய்ய முன்வந்தாலும் அதற்கும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதனால் அந்த துறையில் ஊழல் தான் அதிகரித்து வருகிறது என காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;- ஸ்டாலின் எப்போ ராஜினாமா செய்வாரோ.. உத்தவ் தாக்கரே கதி எப்ப வருமோ.? வயிற்றெரிச்சலில் இந்து முன்னணி.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!