முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக என தகவல் வெளியானது. இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும், வேறு சில உடல்நலக்குறைவு உள்ளவர்களுக்கும் கொரோனா எளிதில் தாக்குகிறது. ஆகையால் மீண்டும் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதன் காரணமாக முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் நேற்று மட்டும் 2,312 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் அதிகபட்சமாக 618 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக என தகவல் வெளியானது. இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காமராஜ் பிறந்தநாளில் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 10% நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.