தொடங்கியது நாடாளுமன்ற தேர்தல் 2024 பணி! பணி முடிப்போம்! வெற்றி வாகை சூடுவோம் -இந்தியா வெல்லும்! மு.க.ஸ்டாலின்

By Ajmal Khan  |  First Published Jan 19, 2024, 2:47 PM IST

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் அறிக்கையை தயார் செய்ய திமுக தலைமை குழு அமைத்துள்ளது. இந்த நிலையில், தொடங்கியது தேர்தல் பணி, வெற்றி வாகை சூடுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்.


தேர்தல் களத்தில் இறங்கிய திமுக

நாடாளுமன்ற தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பாஜக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதற்காக பல மாதங்களாக ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றி பெற வேண்டிய தொகுதிகளை குறிவைத்து செயல்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாநில தலைமைக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் குறைந்த பட்சம் 10 தொகுதிகளை வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தநிலையில் பாஜகவிற்கு தேர்தலில் டப் கொடுக்க எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளது.

Tap to resize

Latest Videos

தேர்தல் அறிக்கை குழுவில் யார்.?

இந்த கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வியூகம் அமைத்து வருகின்றது. இதனிடையே தமிழகத்தில் தேர்தல் பணிகளை மற்ற கட்சிகள் துவங்கும் முன் அதிரடியாக திமுக துவக்கியுள்ளது.  ராமர் கோவில் திறப்பு முடிந்தவுடன் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிடலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் திமுகவின் தேர்தல் பணி சூடு பிடித்துள்ளது. இன்று அதிரடியாக மூன்று குழுக்களை நியமித்திருக்கிறது திமுக தலைமை. கே.என்.நேரு தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு என்று அமைக்கப்பட்டு அதில் மண்டலத்துக்கு ஒருவர் என மேற்கு மண்டலத்துக்கு உதயநிதி, வடக்குக்கு எ.வ.வேலு, தெற்கில் தங்கம் தென்னரசு, டெல்டாவுக்கு நேரு, சென்னைக்கு ஆலந்தூர் பாரதி என குழு உருவாக்கப்பட்டுள்ளது.

தொகுதியை விட்டுக்கொடுக்குமா திமுக குழு

அடுத்ததாக கனிமொழி கருணாநிதி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டு அதில், பிடிஆர், டிஆர்பி ராஜா, மேயர் பிரியா, மாவட்டச் செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், எம்.எம்.அப்துல்லா, கொறடா கோவி செழியன், மருத்துவர் எழிலன், மாணவரணிச் செயலாளர் சிவிஎம்பி எழிலரசன், டிகேஎஸ் இளங்கோவன் குழுவை அமைத்துள்ளது. அடுத்ததாக  கூட்டணிக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுபவஸ்தரான டி.ஆர்.பாலு தலைமையில்  ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நேரு, ஆ.ராசா என மூன்று குழுக்களை நியமித்துள்ளது.

தொடங்கியது தேர்தல் பணி- வெற்றி வாகை சூடுவோம்

தேர்தல் களத்தில் அதிரடியாக இறங்கிய திமுக, எதிர்கட்சிகளை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.  இந்த நிலையில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவரும் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், இந்த குழு தொடர்பான விவரத்தை பகிர்ந்து,  தொடங்கியது தேர்தல் 2024 பணி! பணி முடிப்போம்! வெற்றி வாகை சூடுவோம் இந்தியா வெல்லும் என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

நாடாளுமன்ற தேர்தல் பணியை தொடங்கிய திமுக... தேர்தல் அறிக்கை, கூட்டணி கட்சிகளுடன் பேச குழு அமைப்பு

click me!