Gayathri Raghuram join ADMK : பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தார்!

By manimegalai a  |  First Published Jan 19, 2024, 2:02 PM IST

நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் பாஜக கட்சியில், இருந்து விலகிய நிலையில் தற்போது தற்போது அதிமுக கட்சியில் இணைந்துள்ளார்.
 


கடந்த 2022 ஆம் ஆண்டு, பாஜக கட்சியில் இருந்த பெண் நிர்வாகி டெய்சி சரணுடன், அதே கட்சியை சேர்ந்த திருச்சி சூர்யா ஆபாசமாக பேசுவதாக வீடியோ ஒன்று வெளியானது. இதை பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த காயத்ரி ரகுராம் அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இதுக்குறித்த அவரது கருத்தை பதிவு செய்திருந்தார். மறைமுகமாக கட்சி மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை பற்றியும் இவர் அவதூறு செய்திகளை பரப்பி வந்ததாக கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாக கூறி, கட்சி பொறுப்புகளிலிருந்து ஆறு மாத காலத்திற்கு காயத்ரி  ரகுராம் நீக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். பின்னர் இது குறித்து தன் தரப்பு விளக்கத்தைக் கூட கேட்காமல், தன்னை இடைநீக்கம் செய்ய செய்துவிட்டதாக காயத்ரி ரகுராம் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்திருந்தார். 

Tap to resize

Latest Videos

படுக்கைக்கு அழைத்தால்.. முத்தம் கொடுப்பேன்! ஷாக் கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை பாப்ரி கோஷ்!

பாஜகவில் இருந்து விலகிய பின்னர், தொடர்ந்து அந்த கட்சியையும், கட்சியை சேர்ந்தவர்களையும் சாடி வந்த காயத்ரி ரகுராம். கடந்த 2 வருடமாக எந்த ஒரு காட்சியிலும் தன்னை இணைத்து கொள்ளாமல் இருந்த நிலையில், தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்பு இவர் கட்சியில் இணையும் போது எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Top 10 TRP: சும்மா தடாலடியா இருக்கே.. சன் டிவி சீரியலை அடித்து நொறுக்கி TRP-யில் கெத்து காட்டிய சிறகடிக்க ஆசை!

காயத்ரி ரகுராம் அதிமுக கட்சியில் இணைந்ததை உறுதி செய்யும் விதமாக,  அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது... "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை, இன்று 19.01.2024 சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள 'செவ்வந்தி' இல்லத்தில் மறைந்த திரைப்பட இயக்குனர் திரு.சுப்பிரமணியம் அவர்களின் பேத்தியும், மறைந்த நடன இயக்குனர் திரு . ரகுராம் மாஸ்டர் அவர்களது புதல்வியுமான செல்வி காயத்ரி ரகுராம் அவர்கள் இன்று கழகப் பொதுச் செயலாளர் முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

click me!