ஜெயலலிதாவின் பொருளை ஏலம் விடுவதை போல் தமிழகத்தில் அதிமுகவை ஏலம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்- ஸ்டாலின் கிண்டல்

By Ajmal KhanFirst Published Jan 31, 2023, 9:11 AM IST
Highlights

ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தி்ல் தீர்மானம் நிறைவேற்றி விட்டு தேநீர் விருந்தில் கலந்து கொண்டது ஏன்.? என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புதிய விளக்கம் அளித்துள்ளார்.
 

ஸ்டாலினின் உங்களில் ஒருவன்

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் கேள்வி பதிலை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று வெளியிட்டுள்ள கேள்வி பதிலில்,

கேள்வி: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் களத்தினுடைய நிலவரம் எவ்வாறு இருக்கிறது?

பதில்: இந்த இடைத்தேர்தலே ஒரு துயரமான சூழலில்தான் வந்திருக்கிறது. அந்தத் தொகுதி எம்.எல்.ஏ - தம்பி திருமகன் ஈ.வெ.ரா மறைவு எதிர்பாராதது. அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிகழ்வு. நான் ஈரோட்டுக்கு நேரில் சென்று, அஞ்சலி செலுத்தியபோது, இளங்கோவன் அவர்களின் மனநிலையைப் பார்த்து கலங்கினேன். அரசியலில் தந்தை மறைவுக்கு பிறகு மகனுக்கு வாய்ப்பு வருவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கு திருமகன் ஈ.வெ.ரா மறைந்து, அவரது தந்தை போட்டியிட வேண்டிய நிலை வந்திருக்கிறது. இத்தகைய சூழலில், கனத்த இதயத்தோடுதான்  ஈவிகேஎஸ் இளங்கோவன் களத்தில் நிற்கிறார். 

அமித்ஷாவின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றியதற்கு மகிழ்ச்சி..! ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்த அண்ணாமலை

ஈரோட்டில் திமுக மிகப்பெரிய வெற்றி

எப்படி இருந்தாலும் இது தேர்தல் களம். இந்த இடைத்தேர்தலில் தி.மு.கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். தி.மு.கழக அரசின் சாதனைகளும், நிறைவேற்றி வருகின்ற மக்கள் நலத்திட்டங்களும், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தரும். இந்த இடைத்தேர்தலில் மட்டுமல்ல, இனி வரும் எந்தத் தேர்தலிலுமே தி.மு.கழக கூட்டணிதான் வெல்லும் என்பது உறுதி!

தேநீர் விருந்தில் கலந்து கொண்டது ஏன்.?

கேள்வி: ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த நீங்கள் அவர் கொடுத்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளலாமா? இது பின்வாங்கல் இல்லையா?

பதில்: ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. அன்று அவர் படித்தது அரசின் உரை. ஆகவே அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட உரையை எந்த மாற்றமும் இல்லாமல் அவைக்குறிப்பில் இடம் பெற வேண்டும் என்பதுதான் அத்தீர்மானம் ஏற்கப்பட்டு தத்துவமும் நிலைநாட்டப்பட்டது. உரைக்குப் பதிலளித்து என்னுடைய தீர்மானம்! அவையின் மாண்பும் மக்களாட்சித் சட்டப்பேரவையில் ஆளுநர் பேசியபோது. "மக்களால் நான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் மாண்பைக் காக்கவும், மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆட்சியின் வலிமையை உணர்த்தவும், நூற்றாண்டைக் கடந்த இந்த சட்டமன்றத்தின் விழுமியங்களைப் போற்றவும் நான் என்னுடைய சக்தியை மீறியும் செயல்படுவேன்" என்று குறிப்பிட்டேன். 

இபிஎஸ். ஓபிஎஸ், டிடிவி தினகரன்..இபிஎஸ் போட்ட பிளான் - ஈரோடு கிழக்கு அதிமு வேட்பாளர் யார் தெரியுமா.?

எந்த வித சமரசமும் இல்லை

அதைத்தான் இப்போதும் உங்களுக்கு பதிலாக சொல்ல விரும்புறேன். எனவே, குடியரசு நாள் தேநீர் விருந்து என்பது காலம் காலமாக இருக்கின்ற நடைமுறை மரபு! குடியரசு நாளன்று அதில் பங்கேற்றது மக்களாட்சியின் மாண்பைக் காப்பதற்கான பண்பே தவிர, இதில் அரசியல் பின்வாங்கலும் இல்லை, முன்வாங்கலும் இல்லை. எந்த சமரசமும் இல்லை!

கேள்வி: ஊடகங்கள், சமூக ஊடகங்களை உன்னிப்பாகக் கவனித்து வரும் தலைவர்களில் நீங்களும் ஒருவர். ஊடகங்களின் இன்றைய போக்கைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: பொதுவாக அன்றாடச் செய்திகளுக்காகச் செய்தித்தாள்களை வாசிப்பதோடு, தொலைக்காட்சிகளையும் தொடர்ந்து பார்ப்பேன். டி.வி. மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களையும் தொடர்ந்து கவனிப்பேன். அவற்றில் வரும் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளை உடனடியாகத் தொடர்பு கொண்டு. தீர்வு காணச் சொல்வது என்னுடைய வழக்கம். ஆனால், சில ஊடகங்கள் பிரச்சினையை ஒளிபரப்புகிறார்கள். அதைப் பார்த்துவிட்டு உடனே நடவடிக்கை எடுக்கிறோம்.

கட் அண்ட் பேஸ்ட் அண்ணாமலை.. இதோட நிறுத்திக்கோ! தமிழக பாஜகவை வெளுத்து வாங்கிய திமுக - என்ன காரணம்?

ஊடகங்களின் செயல்பாடு

பிரச்சினையை ஒளிபரப்புகிற ஊடகங்கள், அது தொடர்பாக எடுத்த நடவடிக்கையை வெளிப்படுத்துவதே இல்லை. சில நேரங்களில் காலையில் ஒரு பிரச்சினை பற்றி செய்தி போட்டார்கள் என்றால், அதற்குப் பிற்பகலுக்குள் தீர்வு காணப்பட்டிருக்கும். ஆனாலும், இரவு வரைக்கும் அந்த செய்தியை 'அப்டேட் செய்வதில்லை. பிரச்சினைகளைப் பிரசுரிக்கிற சில செய்தித்தாள்களும்கூட, மறுநாள் அதுகுறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியோ, அரசு அளித்த விளக்கத்தையோ முறையாகப் போடுவதே இல்லை. இனியாவது அத்தகைய போக்கை அவர்கள் மாற்றிக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

ஏலம் விடப்படும் அதிமுக

கேள்வி: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொருட்களை பெங்களூரில் ஏலம் விடுகிறார்களே?

பதில்: இங்கு சிலர் அவருடைய கட்சியையே ஏலம் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்! 

இதையும் படியுங்கள்

காயத்ரி ரகுராமின் மார்பிங் புகைப்படம் வெளியிட்ட பாஜக நிர்வாகி.! தொண்டர்களுக்கு திடீர் அட்வைஸ் சொன்ன அண்ணாமலை

click me!