விரைவில் மத்திய பிரதேசத்திலும் லவ் ஜிஹாத் தடுப்புச் சட்டம்.. மயக்கி திருமணம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 26, 2020, 12:42 PM IST
Highlights

கட்டாய திருமணம் குறித்த புகார்களை, பாதிக்கப்பட்ட பெற்றோர் குடும்பம் அல்லது பாதுகாவலர் ஆகியோரால் செய்யப்படலாம். வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில் அது செல்லாது என அறிவிக்கப்படும் 

உத்திர பிரதேசத்தை தொடர்ந்து, மத்தி பிரதேச மாநிலத்திலும் சட்டவிரோத மதமாற்றத்திற்கு தண்டனை வழங்க வகை செய்யும் அவசர சட்டம், லவ் ஜிஹாத்  தடுப்புச் சட்டத்திற்கான வரைவு மசோதா வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் மாநில முதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.  ஏற்கனவே உத்தரபிரதேச மாநிலத்தில் இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய பிரதேச அரசும் இதை கொண்டுவர தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஒருவரை திட்டமிட்டு காதலித்து பின் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து திருமணம் செய்தால், அந்த திருமணம் செல்லாது  என்றும் இம்மசோதா வலியுறுத்துகிறது. 

குறிப்பாக முஸ்லிம் ஆண்கள், இந்து பெண்களை லவ் ஜிஹாத் என்ற பெயரில் காதல் வலையில் விழ வைத்து அவர்களை கட்டாயமாக மதமாற்றம் செய்வதாக உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புகார் எழுந்தன. ஏற்கனவே காதலின் பெயரால் கட்டாய மதமாற்றத்தை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என ஏற்கனவே உ. பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார். இந்நிலையில் அம் மாநிலத்தில் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இந்த சட்டத்தை அமல்படுத்தும் முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இதற்கான வரைவு மசோதா தொடர்பான ஆலோசனை கூட்டம், சிவராஜ் சிங் சவுகான்  இல்லத்தில் நடைபெற்றது. 

அது டிசம்பர் 28 முதல்  நடைபெற உள்ள அம்மாநில சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  முன்னதாக முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த சட்டத்தை கடுமையாக்கும் வகையில் 10 முக்கிய கட்டுப்பாடுகள் இடம் பெற்றுள்ளன. ஒரு பெண்ணை மயக்கி திருமணம் செய்து மதமாற்றம் செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும், குற்றத்தில் ஈடுபடுவதற்கு ஜாமீன் வழங்க மசோதா தடை செய்கிறது.  மதமாற்றம் மற்றும் திருமணத்திற்கு இருதரப்பினருக்கும் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் எழுத்துப்பூர்வமாக விண்ணப்பம் வழங்க வேண்டும், திருமணம் மற்றும் மதமாற்றத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பே அதை விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்காமல்  மதம் மாற உறுதுணையாக இருக்கும் மதகுருமார்கள் மற்றும் உதவுவோர்க்கு  5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். 

கட்டாய திருமணம் குறித்த புகார்களை, பாதிக்கப்பட்ட பெற்றோர் குடும்பம் அல்லது பாதுகாவலர் ஆகியோரால் செய்யப்படலாம். வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில் அது செல்லாது என அறிவிக்கப்படும் என்பன  உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் இம்மசோதாவில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் ஹரியானா, கர்நாடகா மற்றும் பாஜக ஆட்சி செய்யும் பல்வேறு மாநிலங்களிலும் இதுபோன்ற சட்டங்கள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த சட்டம் இயற்றப்பட்ட நாட்டின் முதல் மாநிலமாக உத்தரபிரதேசம் இருந்தது. இந்த சட்டத்தின் படி வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வாழ்க்கு பதிவுசெய்யவும், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் இது வழிவகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!