முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு படையெடுக்கும் லண்டன் மருத்துவர்கள்..!

By Thiraviaraj RMFirst Published Oct 2, 2021, 3:31 PM IST
Highlights

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது,  சட்டப்பேரவை கூட்டம், ஆய்வு, என தற்போது கிராம சபை கூட்டங்கள் என பம்பரமாய் சுழன்று வருகிறார் மு.க.ஸ்டாலின். 

பல முறை லண்டன் சென்று சிகிச்சை பெற்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கடந்த ஆண்டு சிகிச்சைக்காக லண்டன் செல்ல அவர் முயற்சிகள் எடுத்தபோது கொரோனா முதல் அலை தீவிரமாக இருந்ததால் அந்தப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு தேர்தல் வேலைகள் வந்ததால் அதில் மூழ்கிப்போனார் மு.க.ஸ்டாலின். அடுத்து திமுக வென்று முதலமைச்சராக பதவியேற்றார். இத்னையடுத்து கொரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்துவது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது,  சட்டப்பேரவை கூட்டம், ஆய்வு, என தற்போது கிராம சபை கூட்டங்கள் என பம்பரமாய் சுழன்று வருகிறார் மு.க.ஸ்டாலின். 

இந்த பரபரப்புகளுக்கு இடையேயும், தினமும் நடைப்பயிற்சி, சைக்கிள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மருத்துவர்களின் ஆலோசனைகளையும் கேட்டு அதையும் கவனமாக பின்பற்றுகிறார்.

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான பயணத்தை தவிர்த்து வந்த ஸ்டாலின் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக லண்டன் செல்ல உள்ளதாகவும் அப்படியே சிகிச்சை மேற்கொண்டு திரும்புவதாகவும் ஜூன் மாதத்திலேயே ஒரு தகவல் பரவியது. ஆனால் கொரோனா பயம் விலகாத சூழலில் முதல்வர் சர்வதேச பயணம் மேற்கொள்ள வாய்ப்பில்லை என்று கூறுகின்றனர். அத்துடன் ஊரக உள்ளாட்சி தேர்தல், ஜனவரிக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், நிறைவேற்ற வேண்டிய தேர்தல் வாக்குறுதிகள் என பல்வேறு பணிகள் இருப்பதால் லண்டன் செல்லும் வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.

ஆகையால் லண்டன் மருத்துவர்களை சென்னைக்கு வரவழைத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.

click me!