துக்கம் முடிந்து பிரச்சார களத்திற்கு வந்த ஓ.பி.எஸ்… அதிமுக-வை வீழ்த்த முடியாது என சூளுரை….!

By manimegalai aFirst Published Oct 2, 2021, 12:21 PM IST
Highlights

அதிமுக தொடங்கப்பட்டு 50-வது ஆண்டில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கிறது. இராணிப்பேட்டையில் 100-க்கு 100 இடங்களை அதிமுக கைப்பற்றும்.

அதிமுக தொடங்கப்பட்டு 50-வது ஆண்டில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கிறது. இராணிப்பேட்டையில் 100-க்கு 100 இடங்களை அதிமுக கைப்பற்றும்.

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு அரசியல் கட்சியினர் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக அமைச்சர்கள் ஒன்பது மாவட்டங்களில் முகாமிட்டு பரப்புரை செய்யும் நிலையில் அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்களும் அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மனைவி இறந்த துக்கத்தால் எந்தவித பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் இருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் தற்போது பிரச்சார களத்திற்கு வந்துள்ளாஅர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வன்னிவேட்டில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பன்னீர்செல்வம் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், அதிமுக வேட்பாளர்கள் முகத்தில் வெற்றி சிரிப்பு தெரிவிதாக கூறினார்.

அதிமுக தொடங்கப்பட்டு 50-வது ஆண்டில் இந்த உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதாக கூறிய ஓ.பி.எஸ்., இராணிப்பேட்டையில் 100 சதவீத இடங்களையும் அதிமுக கைப்பற்றும் என்று சூளுரைத்தார். அதிமுக-வின் வெற்றியை தடுக்கும் சக்தி தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் இல்லை என்று கூட்டணியை விட்டு விலகி தனித்து போட்டியிடும் பாமக-வையும் ஓ.பி.எஸ். மறைமுகமாக சாடினார். அதிமுக ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி பரப்புரை செய்த ஓ.பி.எஸ்., சட்டமன்ற தேர்தலில் 1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் ஆட்சி பறிபோய்விட்டது. உள்ளாட்சி தேர்தலில் தொண்டர்கள் கவனமுடன் பணியாற்றி வெற்றியை ஈட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

click me!