ஆண்டவா திமுகவுக்கு நல்ல புத்தியை கொடு... பெட்ரோல் விலையை குறைக்க ஏற்பாடு செய்... அண்ணாமலை வேண்டுகோள்..!

By Thiraviaraj RMFirst Published Oct 2, 2021, 12:02 PM IST
Highlights

பெட்ரோல் விலை சதத்தை தாண்டி விற்பனையாகிக் கொண்டிருக்கும் நிலையில், ரூ. 35 குறைக்க பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 

பெட்ரோல் விலை சதத்தை தாண்டி விற்பனையாகிக் கொண்டிருக்கும் நிலையில், ரூ. 35 குறைக்க பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

விழுப்புரம் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அன்னியூர் பகுதியில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அண்ணாமலையிடம், ’’கூட்டத்தில் இருந்த பொது மக்களில் ஒருவர் பெட்ரோல் விலையை எப்போது குறைப்பீர்கள்’’ என்று கேள்வி எழுப்பினார்.  அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ’’பாஜக கட்சி பெட்ரோல் விலையை 35 ரூபாய் குறைக்கும். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்து விலையை குறைப்போம். தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் வளைகாப்புக்கு சென்றுவிட்டார். இது தான் திமுகவின் அவலமான நிலை. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பாஜக அரசு தயாராக உள்ளது. பெட்ரோல், டீசலை ஏன் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரக்கூடாது என நிதியமைச்சர் சொல்கிறார் என புரியவில்லை. இதனை தமிழக அரசு விளக்க வேண்டும்.

பாஜக பெட்ரோல் விலையை குறைப்பதற்காக தொடர்ந்து போராடும். மாநில அரசு வரியை குறைக்க வேண்டும். திமுகவுக்கு ஆண்டவன் நல்ல புத்தியை கொடுத்து பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர முன்வரவேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.

click me!