இந்த முறை விட்டால் மீளவே முடியாது... தண்ணியாய் வாரி இரைக்கும் எடப்பாடிபழனிச்சாமி.!

Published : Oct 02, 2021, 12:35 PM IST
இந்த முறை விட்டால் மீளவே முடியாது... தண்ணியாய் வாரி இரைக்கும் எடப்பாடிபழனிச்சாமி.!

சுருக்கம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக நிறைய இடங்களில் வெற்றி பெற வேண்டும். அதன் மூலம் தன் பலத்தை நிரூபிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்,   

தமிழகத்தில் பிரிக்கப்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடக்கிறது.

இறுதி வேட்பாளர் பட்டியல் முடிந்து, தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யாமல், வீட்டில் உள்ள பெண்களை கவரும் வகையில், அரிசி மூட்டை, குத்து விளக்கு, வெள்ளி விளக்கு, மூக்குத்தி, சின்ன மிக்சி என அதிமுகவினர் தங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப பரிசு அள்ளித் தருவதாக கூறப்படுகிறது. 

 அதுமட்டுமின்றி பிரசாரத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாப்பாடு போட்டு, ரகம், ரகமாக சரக்கு பாட்டிலும் வினியோகம் செய்யப்படுகிறதாம். சரக்கு அடிக்காத நபர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. சில மாவட்டங்களில் எட்ப்பாடி ஒரு வீட்டில் மூன்று முதல் ஐந்து ஓட்டு இருந்தால் தங்க செயின், டச் செல்போன் என்று வாங்கி தருகிறோம்’’என வாக்குறுதி கொடுத்து அசத்துகிறார்கள்.

 

சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று விடலாம் என எதிர்பார்த்தார் எடப்பாடி பழனி சாமி. கடும்போட்டி நடந்தபோதிலும் 66 இடங்களில் வெற்றி பெற்றது அதிமுக. அந்த் வகையில் அது அதிமுகவுக்கு இது பெரும் தோல்வி அல்ல. திமுக வென்ற பிறகு அதிமுக முன்னாள அமைச்சர்கள் வீடுகளில் ல்லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை மேற்கொள்ளப்பட்டு வர்கிறது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக நிறைய இடங்களில் வெற்றி பெற வேண்டும். அதன் மூலம் தன் பலத்தை நிரூபிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார், அதற்காக அதிமுக பணத்தை வாரி இறைத்து வருகிறது.
 

PREV
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!