டி.டி.வி.,யை தூக்கிச் சாப்பிடும் அதிமுக- திமுக... 24 தொகுதிகளில் விரலை விட்டு ஆட்டும் வேட்பாளர்கள்..!

By Thiraviaraj RMFirst Published Apr 4, 2019, 12:01 PM IST
Highlights

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் பணத்தை அள்ளி இறைக்க தயாராகி விட்டன கட்சிகள். ஆர்.கே.நகர் ஃபார்முலாவை அனைத்துக் கட்சிகளும் பின்பற்றி வருகின்றன. 

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் பணத்தை அள்ளி இறைக்க தயாராகி விட்டன கட்சிகள். ஆர்.கே.நகர் ஃபார்முலாவை அனைத்துக் கட்சிகளும் பின்பற்றி வருகின்றன. 

ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டுக்களை டோக்கனாகக் கொடுத்தும் பல இடங்களில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்யப்பட்டன. பணம் தண்ணீராக செலவு செய்யப்பட்டதால் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் முடிவு அடியோடு மாறியது. இப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெய்த பண மழையை விட தற்போது மக்களவை தேர்தலில் பல மடங்கு பண மழை கொட்டத் தொடங்கியுள்ளதை மத்திய, மாநில உளவு துறைகள் கண்டுபிடித்து அறிக்கை அளித்துள்ளன. 

இந்தியாவிலேயே தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிக பணப்பட்டுவாடா நடக்கும் என கண்காணித்து தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 40 தொகுதிகளிலும் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அதிக பறக்கும் படைகள், அதிக கண்காணிப்பாளர்கள் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கண்காணித்து வருகிறது. 

ஆனாலும், விடாக்கொண்டனாக  மாறிய வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரிகளின் கட்டுப்பாடுகளை மீறி பணம் தண்ணீராக செலவு செய்யப்படுவதை உளவுத்துறை உற்று நோக்கி வருகிறது. அதிலும் குறிப்பாக 40ல் 24 தொகுதிகளில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் புரள்வதாக உளவுத்துறை தலையில் அடித்துக் கொள்கிறது.

அரசியல் தலைவர்களிம் வாரிசுகள் களமிறங்கும் தொகுதிகளில் ரூ.100 கோடியை தாண்டி பணத்தை தண்ணீராக தெளித்து வருவதும் தெரிய வந்துள்ளது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது ஒருபுறம் இருக்க பொதுக் கூட்டங்களை கூட்ட வாரி இறைக்கப்படுறது. இந்தக் கூட்டங்களுக்கு வருபவர்களுக்கு தலைக்கு 1000 ரூபாய். ஒரு குவாட்டர், மதியம் பிரியாணி என தாராளம் காட்டுகின்றனர் வேட்பாளர்கள். மொத்தத்தில் தமிழகம், புதுச்சேரியில் இந்த தேர்தலில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு அதிகமான பணத்தை வேட்பாளர்கள் செலவு செய்வதாக உளவுத்துறை மூலம் தேர்தல் ஆணையம் அதிகாரிகள் கணித்துள்ளனர்.

click me!