மக்களவை தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்..? இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

By vinoth kumarFirst Published Mar 10, 2019, 11:53 AM IST
Highlights

மக்களவைத் தேர்தல் தேதி இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 7 அல்லது 8 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, ஓடிசா, அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் மற்றும் தமிழகத்தில் 21 தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்புள்ளது.

மத்தியில் பாஜக தலைமையிலான 5 ஆண்டு பதவிக்காலம் ஜூன் 3-ம் தேதியுடன் முடிவடைகிறது. மக்களவைக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளையும் சந்தித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஜம்மு-காஷ்மீர், ஆந்திரம், ஒடிசா, சிக்கிம், அருணாசலப்பிரதேசம் மாநில அரசியல் கட்சிகளின் கருத்துகளையும் தேர்தல் ஆணையம் கேட்டறிந்தது.

இந்நிலையில் மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்துவிட்டு, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு தொடங்கியுள்ளன. இதனால் தேர்தல் தேதி எப்போது வெளியாகும் என்று அனைத்து கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. மேலும் தேர்தல் ஆணையம் பாஜக உத்தரவுக்காக தேர்தல் தேதி அறிவிக்காமல் காலதாமதம் செய்வதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தனர். 

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பிற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் நாடு முழுவதும் 7 அல்லது 8 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது. முதல்கட்டத் தேர்தல் ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளது. மக்களவை தேர்தல் தேதி உடன், தமிழகத்தில் காலியாகவுள்ள 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் சட்டப்பேரவை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

click me!