மக்களவை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகராக வலம் வந்துக்கொண்டிருந்த கமல்ஹாசன் கட்சி தொடங்க முடிவு செய்தார். இவர் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி தான் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சிக்கு தலைவராக கமல்ஹாசனும், வழக்கறிஞர் அருணாச்சலம் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டனர். இந்த கட்சி சென்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியை பொறுத்தவரையில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகும்.
வருகிற மக்களவை தேர்தலில் தங்கள் கட்சியும் போட்டியிட இருப்பதால் தங்கள் கட்சிக்கு ஒரு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கமல்ஹாசன் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்னகல் செய்திருந்தார். ஆனால் அவர்களின் கட்சியின் சின்னமாக இருக்கின்றன இணைந்த கைகளைதான் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அவரின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. எனவே மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் டார்ச்லைட் சின்னத்தில் தான் வருகிற மக்கள தேர்தலில் போட்டியிட உள்ளனர். தங்கள் கட்சிக்கு சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.