டிசம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா..? ஸ்ட்கெட்ச் போட்டு தாமதமாக்கத் துடிக்கும் அதிமுக..!

By Thiraviaraj RMFirst Published Nov 20, 2019, 12:31 PM IST
Highlights

பணம் பட்டுவாடா செய்வதில் சிக்கல் உருவாகும் என்பதால் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளது.

டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் சில காரியங்களை நிறைவேற்ற முடியாது என அதிமுக தலைமை கருதுவதால் தேர்தல் இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் தள்ளிப்போகலாம் எனக் கூறப்படுகிறது.  

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து  உச்சநீதிமன்ற கடந்த திங்கட்கிழமை விசாரிக்கப்பட்டது. அப்போது, நீதிபதிகள் ‘இன்னும் 10 தினங்களுக்குள் தோ்தல் நடத்துவதற்கான தேதி விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்’என்று கூறினா். அப்போது, தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.எஸ். நரசிம்மன், ‘டிசம்பா் முதல் வாரத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்’என்றார். 

மாவட்டங்கள் மறுசீரமைப்பு கோரி திமுக சாா்பில் ஆா்.எஸ். பாரதி மனு தாக்கல் செய்துள்ளார்.  அவரது சாா்பில் மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோா் ‘தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான மறுசீரமைப்பு செய்யப்படவில்லை. ஆகவே, அதுகுறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்’என்று கேட்டுள்ளனர். 

இதனையடுத்து‘இந்த வழக்கு வரும் டிசம்பா் 13-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்படுகிறது. அதற்குள், அனைத்து சட்ட நடைமுறைகளும் முடிந்த பிறகு அறிவிக்கை வெளியிடப்படும் என்று நம்புகிறோம். மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி இந்த விவகாரம் தொடா்புடைய மனு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளாா். தலைமை நீதிபதியின் உத்தரவு பெற்று இந்த விவகாரம் தொடா்பான விஷயங்களும் ஒன்றாகச் சோ்க்கப்பட்டு உரிய அமா்வு முன் விசாரணைக்குப் பட்டியலிடப்படும்’என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா். ஆகையால் டிசம்பர் 2ம் தேதி எப்போது தேர்தல் என அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால் டிசம்பர் மாதம் உள்ளாட்சித்தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தலைமை விரும்பவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. காரணம், இன்னும் பல துறைகளில் டெண்டர்கள் விடவில்லை. டெண்டர்களை முழுமையாக முடித்து, டிரான்ஸ்பர்களை பூர்த்தி செய்த பிறகே அதிமுக தேர்தலுக்கு தயாராகும் என அக்கட்சி தலைமை நிர்வாகிகள் கூறுகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு ரூ.2000 வீதம் ஒரு குடும்பத்திற்கு தமிழக அரசு வழங்க உள்ளது. அது போக ஒரு குடும்பத்திற்கு ரூ.1000 என உள்ளாட்சித்தேர்தலை மனதில் வைத்து அதிமுக பட்டுவாடா செய்யும் திட்டத்தில் இருக்கிறது.

 

டிசம்பரில் தேர்தல் நடத்தினால் பணம் பட்டுவாடா செய்வதில் சிக்கல் உருவாகும் என்பதால் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளது. பாஜக கூட்டணி அமைத்துள்ளதால் உச்சநீதிமன்றத்தில் ஏதாவது காரணத்தை சொல்லி காரியம் சாதித்து விடலாம் என காய் நகர்த்தி வருகிறது அதிமுக. ஆகையால் வரும் டிசம்பர் -2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் எப்போது என்கிற அறிவிப்பில் மாற்றம் வரலாம் எனப் பேசிக் கொள்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். 

click me!