உலகில் கொடூரமானவர்கள் இந்துக்கள்... திருமாவுக்காக ஒட்டுமொத்தமாக வம்பிழுக்கும் பா.ரஞ்சித்..!

Published : Nov 20, 2019, 11:19 AM IST
உலகில் கொடூரமானவர்கள் இந்துக்கள்... திருமாவுக்காக ஒட்டுமொத்தமாக வம்பிழுக்கும் பா.ரஞ்சித்..!

சுருக்கம்

ஒரு கருத்தையொற்றி எதிர்வைக்கப்படும் விமர்சனம் விவாதத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இங்கு விமர்சனங்களாக வசைகள், தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவதூறு நிகழ்த்தப்படுவது இவர்களுக்கு பண்பாடாகவே இருக்கிறது.

திருமாவளவனை தரம் தாழ்த்தும் பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும்  ஈடேறப்போவதில்லை என இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் மூலமாக தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ’’உலகில் கொடூரமானவர்களை வரிசைப்படுத்தினால் இந்துக்களை முன்னே நிறுத்தலாம் என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். "இந்துக்கள்" என்பது ஆங்கிலேயர்கள் காலத்தில் தான் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டது என்ற போதிலும், சாதிகளைக் கொண்ட அதன் திரட்சி நாளுக்கு நாள் மூர்க்கமாகி வருகிறது.

அவர்களின் கருத்தை எதிர்கொள்ள முடியாமல் வசவுகளையும், அவதூறுகளையும் செய்து கொண்டிருப்போரை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாக கண்டிக்கிறது. 

சாதி ஒழிப்பில் பின்தங்கிப் போனது, மக்களை வெறும் வாக்குகளாக மட்டுமே நினைத்தது, பெரியாரை-அண்ணலை கொண்டு சேர்க்காதது.. என்பவற்றால் இன்று வலதுசாரித் தன்மை கொண்ட இரண்டு தலைமுறைகள் வளர்ந்திருக்கிறது. இவர்கள்தான் இன்று உண்மையாக இருப்பதை கூறியதற்கு கண்மூடித்தனமான அவதூறுகளை செய்பவர்கள்.

ஒரு கருத்தையொற்றி எதிர்வைக்கப்படும் விமர்சனம் விவாதத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இங்கு விமர்சனங்களாக வசைகள், தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவதூறு நிகழ்த்தப்படுவது இவர்களுக்கு பண்பாடாகவே இருக்கிறது. அண்ணன் திருமா அவர்களை தரம் தாழ்த்தும் பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும்  ஈடேறபோவதில்லை’’எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். பா.ரஞ்சித் தனது கருத்தை தான் நடத்தி வரும் நீலம் பண்பாட்டு மையம் வழியாக சுற்றிவளைத்துக் கூறியிருக்கிறார். 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!