விழுப்புரத்தில் ஒட்டுமொத்தமாக திமுகவை காலி பண்ண சி.வி.சண்முகம் அதிரடி திட்டம்... பல்லாயிரக்கானோருக்கு கறி விருந்து..!

By vinoth kumarFirst Published Nov 20, 2019, 12:07 PM IST
Highlights

நடந்து முடிந்த விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த நிர்வாகிகளுக்கு தடபுடலாக கறி விருந்து வைத்து அமைச்சர் சி.வி.சண்முகம் உபசரித்துள்ளார். 

நடந்து முடிந்த விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த நிர்வாகிகளுக்கு தடபுடலாக கறி விருந்து வைத்து அமைச்சர் சி.வி.சண்முகம் உபசரித்துள்ளார். 

மக்களவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்ற நிலையில் அடுத்து நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்றே கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால் அந்த கணிப்புகளை எல்லாம் தவிடு பொடியாக்கி  44,924 வாக்குகள் வித்தியாசத்தில் விக்கிரவாண்டியில் அதிமுகவை வெற்றி பெற அமைச்சர் சி.வி.சண்முகம் முக்கிய பங்காற்றினர். தேர்தல் சமயத்தில் வீட்டில் நிகழ்ந்த துக்கச் சம்பவத்தையும் கட்சிக்காக தாங்கிக் கொண்டு அதிமுக வெற்றிக்காக உழைத்தனர். அதற்கு பலனாக முத்தமிழ்செல்வன் அமோக வெற்றி பெற்றார். 

விக்கிரவாண்டியில் வெற்றி உறுதியானதையடுத்து முதல்வர் தொலைபேசியில் அழைத்து அமைச்சர் சி.வி.சண்முகத்தை புகழ்ந்து தள்ளிவிட்டார். ஆனால், அமைச்சரோ பெருந்தன்மையாக இந்த வெற்றிக்கு எங்க அண்ணன் தான் காரணம் என்று கூறி நெகிழ்ந்து போனார். விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 266 வாக்குசாவடிகள் உள்ளன.

அதில், அமைச்சர் சி.வி.சண்முகதத்தின் அண்ணனும், நியூஸ் ஜெ. நிர்வாக இயக்குநனருமான ராதாகிருஷ்ணன் மட்டும் வாக்குப்பதிவு நடத்த ஒரே நாளில் 145 வாக்குச்சாவடிகளை திறம்பட கையாண்டதே வெற்றிக்கு காரணம். 

இதனையடுத்து, விக்கிரவாண்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அவரது அண்ணணை புகழ்ந்து பேசினார். இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் அனைவருக்கும் தனியார் மண்டபத்தில் கறி விருந்து அளித்து அமைச்சர் சி.வி.சண்முகம் சிறப்பாக உபசரித்துள்ளார்.

இதனால், நிர்வாகிகள் குஷியாகி உள்ளனர். இந்த உற்சாகம் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரலாம் என்பதால் திமுக முகாம் கலக்கத்தில் உள்ளது.

click me!