மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தல் அட்ராசிட்டி….. தேர்தல் அதிகாரியை தாக்கி ரயில் முன்பு தள்ளி கொடூர கொலை…

First Published May 17, 2018, 3:54 PM IST
Highlights
local body election teacher killed by tmc


மேற்கு வங்கத்தில் கள்ள ஓட்டு போடுவதைத் தடுத்த தேர்தல் அதிகாரியான ஆசிரியர் ஒருவரை திரிணாமல் காங்கிரஸ் கட்சியின் கொடூரமாக தாக்கு ரயில் முன்பு அவரை தள்ளி கொலை  செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் உள்ளாட்சித்  தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின்போது  பூத் ஒன்றுக்கு அதிகாரியாக ராஜ்குமார் ராய் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

பிற்பகல் 1 மணிக்கு அந்த பூத்துக்குள் நுழைந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரௌடிகள் சிலர் கள்ள ஓட்டுகள் போட முயன்றனர். அப்போது தேர்தல் அதிகாரியாக இருந்த ராஜ்குமார் ராய் அதனைத் தடுக்க முயன்றார்.

இதனால் ஆத்திரமடைந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரௌடிகள், ராஜ்குமாரை கடுமையாக தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார். ஆனாலும் அவர்கள் விடாமல் ராஜ்குமாரை தூக்கிச் சென்றனர்.

அவர் எங்கே இருக்கிறார் என அவரது குடும்பத்தினர் தவித்தனர். மேலும் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ராசுகுமார் கொல்ல்ப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து  அவரது சடலம் ராய்கஞ்ச் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டது.

ராஜ்குமாரை கடத்திச் சென்றற திரிணாமல் காங்கிரஸ் கட்சியினர், அவரை ஓடும் ரயிலுக்கு மன்வு தள்ளி கொலை செய்தது தெரியவந்தது, ஆனால் அது குறித்து தேர்தல் ஆணையமோ அல்லது போலீசாரோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உள்ளாட்சித் தேர்தல்  வாக்குப்பதிவு நடந்த அன்றைய தினம் மட்டும் 7 கம்யூனிஸ்ட்  கட்சியினர் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர்.

click me!