
தேர்தல் களத்தில் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்ட மதச்சார்பற்ற ஜனதா தளத்தினரும் காங்கிரஸ் கட்சியும் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைக்க முயற்சித்துவருகையில், பாஜக மாநிலத்தில் 104 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக நிற்கிறது. பெரும்பான்மைக்கு இன்னும் எட்டு இடங்களே தேவையான நிலையில் அதை முழுவதுமாக மறைத்துவிட்டு இன்று காலை அவசர அவசரமாக தானும் பங்கேற்காமல், மோடியையும் அனுப்பாமல், அமைச்சர்கால் யாரும் இல்லாத எடியூரப்பாவை மட்டுமே பதவி ஏற்க வைத்தார் பிஜேபி லீடர்.
இந்த வெற்றிக்குக் காரணம் பிரதமர் மோடி என்று பாஜகவில் பலரும் பாராட்டினாலும், ஆனால் இந்த எலக்ஷன் ரிசல்ட் பாசிட்டிவாக வர காரணமே லீடர் அமித் ஷாதான். தனது வழக்கமான இந்த, மாஸ்டர் ஸ்டோக் தான் காரணம் பிஜேபி வெல்லக் என்கிறார்கள் கர்நாடகாவில் தேர்தல் பணியாற்றிய பிஜேபி பிரமுகர்கள். கர்நாடக பிஜெபியினரிடமிருந்து கிடைத்த ஒரு சுவாரஸ்யத் தகவல் தான் இது. ஆமாம் களத்தில் அமித் ஷா வகுத்துக் கொடுத்த வியூகம் என்னவென்று கசிந்துள்ளது. பிஜேபியுடன் கருத்து வேறுபாடு கொண்டிருக்கும் மாற்றுக் கட்சியினரும்கூட அமித்ஷாவின் எலக்ஷன் ஆளுமையை தெரிந்துகொள்ளலாம்.
கடந்த ஆண்டே கர்நாடகவிற்க்கு தேர்தல் மே மாதம் என்பதை துல்லியமாக ‘அறிந்து வைத்திருந்த’ அமித்ஷா தேர்தல் பணிகளுக்காக வகுத்த முதல் திட்டம்தான், ‘டார்கெட் 90 டேஸ்’. அதாவது குறுவைப் பயிர் போல தேர்தல் அறுவடைக்கான 90 நாட்கள் திட்டம் தான் இது.
இந்த திட்டத்தில், முதல் 45 நாட்களுக்குள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் ஆகியோர் தங்களின் சொந்தத் தொழில், குடும்ப வேலைகள் ஆகியவற்றை முடித்துக்கொள்ள வேண்டும். அடுத்த 45 நாட்கள் அவர்கள் தங்களது ஒரு நாளின் 24 மணி நேரத்தையும் கட்சிக்காகவே கொடுக்க வேண்டும். முழுக்க முழுக்க 45 நாட்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் தங்களது ஒட்டுமொத்த ஆற்றலையும் கட்சிக்காகவே செலவழிக்கணும். தங்கள் சொந்த ஊரில், சொந்தப் பகுதியில்தான் இருப்பார்கள். ஆனால் வீட்டுக்குப் போகக் கூடாது. ( அட) இது பயங்கரமா இருக்கே.
ஆமாம் பிஜேபி களத்தில் வகுத்த அடுத்த வியூகம் இது. மற்ற கட்சித் தலைவர்கள் எல்லாம் நமக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்று விசாரிப்பார்கள். ஆனால் ஒரு தேசியக் கட்சியின் லீடரான அமித் ஷாவோ, தொகுதியில் நாம் எத்தனை பூத்கள் வெல்ல முடியும் என்றுதான் நிர்வாகிகளிடம் விசாரிப்பார். இதுதான் மைக்ரோ மேனேஜ்மென்ட் எனப்படும். இந்தக் குறு மேலாண்மைதான் பாஜகவை 104 தொகுதிகளை கைப்பற்ற வைத்தது.
ஒவ்வொரு பூத்துக்கும் 25 இளைஞர்கள் கொண்ட ஒரு டீம். இந்த 25 பேர் கொண்ட டீமில் பெண்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கட்டாயம் இடம்பெற வேண்டும். அந்த டீம் அந்த பூத்தில் உள்ள அதிகபட்சம் ஆயிரம் வாக்காளர்களை தினமும் காலை மாலை வாக்கு சேகரிக்க சொல்ல வேண்டும். வாக்கு சேகரிக்க செல்லுமிடத்தில் வாக்களர்களின் WhatsApp நம்பர் வாங்க வேண்டும். இந்த வேலை 90 நாட்களின் முதல் பதினைந்து நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்பட்டது. அந்த WhatsApp நம்பர் அந்த பூத் டீமால் ஏற்படுத்தப்படும் WhatsApp க்ரூப்களில் சேர்க்கப்பட்டன.
இதனையடுத்து, கடந்த ஆறு மாதங்களுக்கு முன் டெல்லியில் நடந்த பாஜக தேசிய இளைஞர் அணிக் கூட்டத்தில் மோடி பேசிய வார்த்தைகள், “நெக்ஸ்ட் எலக்ஷன் வில் பி ஃபாட் த்ரூ ஒன்லி ஃபோன்” என்பதுதான் இதை மைண்டில் வைத்தே அடுத்தகட்டமாக காய் நகர்த்தினார் அமித்ஷா.
அதாவது அடுத்து வரும் தேர்தல் எல்லாம், செல்போனுக்குள் இருப்பவர்களுக்குள் செல்போனுக்குள் இருப்பவர்கள் மூலமாகவே நடைபெறும் என்று பேசினார் பிரதமர் மோடி. இன்றைய உலகம் என்பது ஸ்மார்ட் போனுக்குள் இருக்கிறது. எனவே அனைவரையும் ஸ்மார்ட் போனுக்குள் கொண்டுவாருங்கள் என்று அழைப்பு விடுத்திருந்தார் மோடி. அதை இந்தத் தேர்தலில் செயல்படுத்திக் காட்டினார் அமித்ஷா.
ஒவ்வொரு பூத்திலும் இருக்கும் 25 இளைஞர்கள் கொண்ட குழு தங்கள் பூத்துக்காக மட்டும் 25 முதல் 100 WhatsApp க்ரூப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறது. இந்த WhatsApp குரூப்புகளின் அட்மின்களான அந்த 25 பேரும் தங்களுக்கு வருகிற செய்திகளை தினந்தோறும் தங்கள் குரூப்புகளுக்கு ஃபார்வர்டு செய்ய வேண்டும். இதற்கான செயல் திட்டமும் முதல் 45 நாட்களில் உருவாக்கப்பட்டுவிட்டது.
பிஜேபி கர்நாடக மாநிலத்துக்கு என்று தனியாக ஒரு தேர்தல் அறிக்கை தயாரித்தாலும் கர்நாடகத்தை பல மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனித்தனித் தேர்தல் அறிக்கை தயாரித்தனர். ஏனெனில் ஒவ்வொரு மண்டலமும் தங்களுக்கென்று பிரத்யேக பிரச்சினைகளைக் கொண்டுள்ளன. அவற்றை அடிப்படையாகக் கொண்டு மண்டல தேர்தல் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.
இந்த மண்டல பிரச்சினைகளை மையமாக வைத்து செய்திகள் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டல மையத்திடமிருந்தும் அந்தந்த வாட்ஸ் அப் க்ரூப் அட்மின்களுக்குச் செல்லும். அதை அவர்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு அனுப்பிப் பரப்ப வேண்டும்.
குறிப்பாக ஒவ்வொரு மாவட்ட, ஒன்றிய காங்கிரஸ்காரர்களின் சொத்து மதிப்பு ஐந்து ஆண்டுகளுக்கு முன் என்ன, கடந்த ஐந்தாண்டு காங்கிரஸ் ஆட்சிக்குப் பின் சொத்து மதிப்பு என்ன என்பது பற்றிய தெளிவாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட, ஒன்றிய WhatsApp க்ரூப்புகளுக்கு அனுப்பப்பட்டது. “மிகப் பெரிய தலைவர்களைதான் விமர்சிக்க வேண்டும் என்பது இல்லை.
உன் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் காங்கிரஸ்காரர் எப்படிப்பட்டவர் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும்” என்பதுதான் அமித் ஷாவின் உத்தரவு. இது பொதுமக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது என்பதற்குக் கடற்கரையோர கர்நாடகாவில் பாஜகவுக்குக் கிடைத்த பெரும் வாக்குகளே சாட்சி.
இது தவிர ராகுல் முதல் சித்தராமையா வரையிலான தனிநபர் தாக்குதல் வீடியோக்களும் வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்டுப் பரப்பப்பட்டன.
எடியூரப்பா முதல்வராக முன்னிறுத்தப்பட்டாலும் அவர் மேல் பல பாஜக நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்தனர். மேலும் எடியூரப்பாவுடன் தனிக்கட்சியாக சென்றுவிட்டு மீண்டும் பாஜகவுக்குத் திரும்பிய நிர்வாகிகள் உள்ளூர் பாஜக நிர்வாகிகளால் மதிக்கப்படவில்லை.
மக்களைச் சந்திப்பதற்கு முன்பாக கட்சி நிர்வாகிகளுக்கு அமித்ஷா இட்ட கட்டளை அந்த அதிருப்தி நிர்வாகிகளைச் சரிப்படுத்த வேண்டும் என்பதே. அப்படிப்பட்ட உள்ளூர் தலைவர்களைச் சந்தித்து மாநில அளவிலான குழுவினர் பேசி அவர்களது அதிருப்தியை நிவர்த்தி செய்திருக்கிறார்கள். தான் தேசியத் தலைவர் என்ற உயர்ந்த இடத்தில் இருப்பதால் ஒரு கோட்டுக்குள் தன்னை நிறுத்திக்கொள்ளாமல், தேவைப்பட்டால் அதிருப்தியில் இருந்த சில தலைவர்களுடன் தானே போனில் பேசி பல போட்டி வேட்பாளர்களை முளையிலேயே ‘ஆஃப்’ செய்திருக்கிறார் அமித் ஷா.
ஒரு பூத் என்றால் சுமாராக 700 முதல் ஆயிரத்தைத் தாண்டிய வாக்காளர்கள் இருப்பார்கள். இவர்களை தினமும் சந்திப்பதற்காக பைக் ராலி என்ற திட்டம் இரண்டாவது 45 நாட்களுக்கும் செயல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு பூத்திலும் பைக் ரேலிக்காக ஒரு டீம் ரெடியாக இருக்கும். அதிலுள்ள ஒவ்வொரு டூ வீலருக்கும் ஒரு நாளைக்கு பெட்ரோல் போட 100 ரூபாய் தரப்படும். அந்தக் குழு மோட்டார் பைக்குகளில் தங்களில் பூத்துக்குள்ளே சுற்றி வரவேண்டும். தினமும் காலையும் மாலையும் இந்த பைக் ராலி நடக்கணும்.
காலையில் பாஜக கொடிகட்டிய பைக்குகளில் செல்லும் இளைஞர்கள் அந்தந்தப் பகுதியின் பிரச்சினைகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பூத்திலுள்ள அனைவருக்கும் கொடுத்துவிட்டு வந்துவிடுவார்கள். மாலையில் மீண்டும் அதே பகுதிகளுக்குச் சென்று வேறு ஏதாவது பிரச்சினைகள் இருக்கின்றனவா என்பது குறித்து பூத் மக்களிடம் பேசுவார்கள். இவ்வாறு கடந்த 45 நாட்களும் பிஜேபியினர் மக்களோடு மக்களாக இருந்திருக்கின்றனர்.
“உன் பூத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் உனக்குத் தெரிந்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு பூத் தை சூம் செய்து பார்க்க வேண்டும்” என்பதுதான் அமித்ஷாவின் அல்டிமேட் ப்ளான். இதை கட்சி நிர்வாகிகளுக்கு இட்ட கட்டளை. வியூகத்தின் பலனாகத்தான் பாஜக 104 இடங்களில் வெற்றிபெற்றுத் தனிப் பெரும் கட்சியாக மாறியிருக்கிறது.
பெரும்பான்மை கிடைக்க இன்னும் சில இடங்கள் தேவைப்பட்டாலும், கடந்த 90 நாட்களில் நாம் மக்களோடு ஏற்படுத்திக் கொண்ட தொடர்பு அறுந்துவிடக் கூடாது. இது மக்களவைத் தேர்தலுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என பிஜேபி தலைமையின் உத்தரவு. எனவே தி மாஸ் லீடர் அமித் ஷாவின் இந்த இந்த ஸ்கெட்ச் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் பிஜேபிக்கு உதவும் என்கிறார்கள் அமித் ஷாவின் கட்டளைப்படி கர்நாடகத்தை அங்குலம் அங்குலமாய் ஆராய்ந்த பிஜேபி நிர்வாகிகள்!