வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும், வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. வரும் 12-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும், வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. வரும் 12-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் புதிதாக உருவான மற்றும் மறுவறை செய்யப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அத்துடன் ஏனைய 28 மாவட்டங்களிலும் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தற்செயல் தேர்தல் நடைபெற்றது. முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6-ஆம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று ஒன்பது மாவட்டங்களில் 35 ஒன்றியங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது.
undefined
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. 6 மணிக்கு முன்பு வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது. பல்வேறு ஊர்களில் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வமுடன் வந்து ஜனநாயக கடமையாற்றினர். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் முதல் தலைமுறை வாக்காளர்கள், முதியோர்கள் வாக்களிக்க தவறவில்லை. மாலையில் வாக்குப்பதிவு நிறைவுபெற்றதும், வாக்குப்பெட்டிகள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பத்திரமாக சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
நெல்லையில் மாலை 5 மணி நிலவரப்படி 75.53 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. விழுப்புரத்தில் 70.06 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. குறைந்தபட்சமக திருப்பத்தூரில் 54.33 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ராணிப்பேட்டையில் 75.53% வாக்குகள் பதிவாகி இருந்தது. ஒன்பது மாவட்டங்களிலும் இறுதி வாக்குப்பதிவு நிலவரத்தை மாநில தேர்தல் ஆணையம் நாளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.