ஜெயலலிதா, சசிகலாவின் கொடநாடு எஸ்டேட் வங்கி கணக்குகள் முடக்கம்.. வருமானவரித்துறை அதிரடி..!

By vinoth kumarFirst Published Oct 9, 2021, 6:00 PM IST
Highlights

2017ம் ஆண்டு வருமான வரித்துறை சோதனைக்குப் பிறகு, சசிகலா மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை முடக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை வருமான வரித்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மறைந்த  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு கர்சன் எஸ்டேட் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை அதிரடியாக முடக்கியுள்ளது. 

2017ம் ஆண்டு வருமான வரித்துறை சோதனைக்குப் பிறகு, சசிகலா மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை முடக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை வருமான வரித்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் செப்டம்பர் மாதத்தில் பினாமி சட்டத்தின்கீழ் சசிகலாவுக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களாவை வருமான வரித்துறையினர் முடக்கம் செய்தனர். அதுமட்டுமல்லாமல் இதுவரை சுமார் 2000 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி வருமான வரித்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது வரி பாக்கி நிலுவையில் இருந்த நிலையில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு, கர்சன் எஸ்டேட் உள்ளிட்ட 2 கணக்குகளை வருமான வரித்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. வருமான வரித்துறைக்கே வரி பாக்கி நிலுவையில் இருப்பதன் காரணமாக முடக்கப்பட்டதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!