இந்த அமைச்சருக்கு பொய் சொல்றதே பொழப்பு… சேகர்பாபுவை பிறாண்டிய அண்ணாமலை

Published : Oct 09, 2021, 07:09 PM IST
இந்த அமைச்சருக்கு பொய் சொல்றதே பொழப்பு… சேகர்பாபுவை பிறாண்டிய அண்ணாமலை

சுருக்கம்

அமைச்சர் சேகர் பாபு பொய் சொல்வதையே பிழைப்பாக வைத்து கொண்டு இருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருக்கிறார்.

சென்னை: அமைச்சர் சேகர் பாபு பொய் சொல்வதையே பிழைப்பாக வைத்து கொண்டு இருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருக்கிறார்.

தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க வலியுறுத்தி கடந்த 7ம் தேதி பாஜக போராட்டம் நடத்தியது. இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, போராட்டம் நடத்த வேறு எந்த காரணங்களும் இல்லாத காரணத்தால் பாஜக இப்படி போராட்டம் நடத்துகிறது என்று விமர்சித்து இருந்தார்.

இந் நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் சேகர்பாபு கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது

கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதம் குறைவாக இருக்கும் பகுதிகளில் தளர்வுகளை கொண்டு வரலாம் என்று மத்திய அரசு கூறி இருக்கிறது. தமிழகத்தை எடுத்துக் கொண்டால் தருமபுரியில் தான் அதிகபட்சமாக 2.48 சதவீதம் பாதிப்பு விகிதம் உள்ளது. இந்த விகிதம் எல்லாம் மத்திய அரசு கூறி இருக்கும் பாதிப்பு விகிதத்துக்கு கீழே தான் இருக்கிறது.

ஆனால் அமைச்சர் எந்த தேங்காயை உருட்டி எந்த தேங்காயை உடைக்க ஐடியா பண்ணுகிறார் என்று தெரியவில்லை. மக்கள் மத்தியில் பொய் பேசுவதையே பிழைப்பாக வைத்திருக்கிறார் என்று கூறினார்.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!