நவம்பர் 1 ஆம் தேதி ( LKG,UKG )மழலையர், பிரைமரி பள்ளிகள் திறப்பு இல்லை.. தமிழக அரசு அதிரடி ஆணை.

By Ezhilarasan BabuFirst Published Oct 23, 2021, 10:41 AM IST
Highlights

இந்நிலையில் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, 

மழலையர் மற்றும் பிரைமரி பள்ளிகள்  வரும் நவம்பர் 1ம் தேதி திறக்கப்பட மாட்டாது என்று தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. நவம்பர் 1-ஆம் தேதி முதல் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த புதிய திருத்த உத்தரவு வந்துள்ளது. இது கொரோனா அச்சத்தில் உள்ள பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. 

இதையும் படியுங்கள்: தவறாமல் இதை செய்யுங்க.. இல்லன்னா ஆக்ஷன் கடுமையா இருக்கும்.. காக்கிகளை அலறவிட்ட டிஜிபி சைலேந்திரபாபு.

இந்நிலையில் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, இந்நிலையில் அனைத்து மழலையர் நர்சரி மற்றும் அங்கன்வாடி மையங்கள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் விரைவில் மழலையர் மற்றும் நர்சரி, பிரைமரி அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படும் என்று தகவல் வெளியானது. இது குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், நர்சரி பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது என கூறினார். கொரோனா முழுமையாக அழிக்கப்படவில்லை, அதனை கருத்தில் கொண்டு படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்: பாமக மாவட்ட செயலாளர் நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொலை.. திருநள்ளாறில் 144 நடை உத்தரவு.

குறிப்பாக மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என்பதால் மழலையர் நர்சரி மற்றும் அங்கன்வாடி மையங்கள் திறப்பு குறித்து இன்னும் ஆலோசிக்கப்படவில்லை என்றார். எனவே நவம்பர் 1 அன்று மாழலையர், நர்சரி மற்றும் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படாது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பெற்றோர்கள் கருத்துகளை கேட்டறிந்த பின்னர் மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்திருந்த நிலையில், இந்த திருத்த ஆணை வெளியாகி உள்ளது. அதாவது மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் LKG, UKG க்கு தற்போது பள்ளிகள் திறப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு பிறகு வெளியாகும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!