அம்மா இருந்திருந்தால் இந்த நிலை வந்து இருக்குமா? குண்டு கல்யாணத்துக்கு உதவ தொண்டர்களை அழைக்கும் பூங்குன்றன்.!

By vinoth kumar  |  First Published Oct 23, 2021, 10:34 AM IST

இவரது சகோதரர் புரட்சித்தலைவரின் உதவியாளர். அவர்களின் வழியில் இவரும் உழைத்து வருகிறார். இவருக்கே இந்த நிலைமை எனும்போது அடிமட்ட தொண்டனின் நிலை என்ன? அம்மா இருந்திருந்தால் அப்படி என்ன நடந்திருக்கும். இது பலருடைய மனதில் எழும் கேள்வி.


பலர் அம்மாவுடன் இன்றைய தலைவர்களை ஒப்பிட்டு பேசுகிறார்கள். அது தவறு. இதற்கு ஒரு உதாரணம் தான் நடிகர் குண்டு கல்யாணம் என பூங்குன்றன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன் அவரது முகநூல் பக்கத்தில்;- பலர் அம்மாவுடன் இன்றைய தலைவர்களை ஒப்பிட்டு பேசுகிறார்கள். அது தவறு. இதற்கு ஒரு உதாரணம் தான் நடிகர் குண்டு கல்யாணம் அவர்களின் நிலை. நடிகர், நட்சத்திர பேச்சாளர் என்பதைவிட விசுவாசத் தொண்டனாக பயணிப்பவர் நடிகர் குண்டு கல்யாணம் அவர்கள். கழகம் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே தலைமையோடு நெருக்கமாக பயணிக்கிற குடும்பம். தந்தை, சகோதரன் இப்படி இவர் குடும்பமே கழகத்தின் வெற்றிக்காக அயராது உழைத்து வந்தது. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- ஓ.பி.எஸின் அதிர்ஷ்டம் அது.. சசிகலாவுக்கு அது பலன் அளிக்காது.. பூங்குன்றன் சொல்லும் ரகசியம்..!

இவரது சகோதரர் புரட்சித்தலைவரின் உதவியாளர். அவர்களின் வழியில் இவரும் உழைத்து வருகிறார். இவருக்கே இந்த நிலைமை எனும்போது அடிமட்ட தொண்டனின் நிலை என்ன? அம்மா இருந்திருந்தால் அப்படி என்ன நடந்திருக்கும். இது பலருடைய மனதில் எழும் கேள்வி! அம்மா அவருக்கு மருத்துவ உதவியாக சில லட்சங்கள் பணம் கொடுத்திருப்பார் என்று நினைத்தால், நீங்கள் அம்மாவை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம். குண்டு கல்யாணம் நலம் பெரும் வரை உதவி செய்ய ஆணையிடுவார். குடும்பத்திற்கும் பொருளுதவி செய்வார். சிகிச்சைக்கான மொத்த செலவையும் கழகமே ஏற்றுக்கொள்ளும். அவ்வப்போது என்ன நடக்கிறது என்றும் தெரிந்து கொள்வார்.

இதையும் படிங்க;- ஓ.பி.எஸ் மனைவிக்காக தேடியது முருகன் திருவடிகளில்.. அர்த்தம் புரியாத ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்..!

அப்படி ஆணையிட்டு பலருக்கு உதவியதை நான் பார்த்திருக்கிறேன். செயல்படுத்தியும் இருக்கிறேன். அம்மாவின் மனது அவரது ஆசானைப் போல வள்ளல் மனது. எனவே, யாரையும் யாரோடும் ஒப்பிடாதீர்கள். தலைவர்கள் உதவ மறந்தால் என்ன... தொண்டர்களே ஒன்று கூடுங்கள். வள்ளலின் வாரிசுகளே! நாங்களும் வள்ளல்கள்தான் என்பதைக் காட்டுங்கள். நாம் செய்யும் சிறு சிறு உதவி சேர்ந்தால் தலைவர், தலைவி இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை உலகிற்கு காட்டும். உதவி செய்தவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் என பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.

click me!