சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.
தேர்தல் கூட்டணி குறித்து டெல்லி தலைமைதான் முடிவெடுக்கும். என் கருத்தை நான் ஆழமாக கூறிவிட்டேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசிய அண்ணாமலை;- டெல்லியிலுள்ள பாஜக மேலிட தலைவர்கள் தான் இனி கூட்டணி பற்றி முடிவெடுப்பார்கள். எனது கருத்தை நான் ஆழமாக தேசிய தலைமையிடம் கூறிவிட்டேன். முடிவை அவர்கள்தான் எடுக்க வேண்டும்.
undefined
இதையும் படிங்க;- உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் மாஸ் என்ட்ரி கொடுத்த அண்ணாமலை! கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகிறது?
கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும். அது அவர்களின் விருப்பம். அதைப் பற்றி நாம் ஏன் பேசவேண்டும். ஜனவரியில் என் மண் என் மக்கள் நடைபயண நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். சென்னையில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்திற்கு 10 லட்சம் தொண்டர்கள் திரட்ட வேண்டும் என கூறியுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளுக்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி அடுத்த 7 மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். பெண்களை அதிக எண்ணிக்கையில் பூத் கமிட்டியில் சேர்க்க வேண்டும் என்று பேசியுள்ளார். பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்ட நிலையில் டெல்லி சென்று வந்த பின் அண்ணாமலை தனது கருத்தை கூறியுள்ளார்.