கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை இருப்பதைப் போல, பள்ளிவாசல் மற்றும் தர்காக்களுக்கு வக்பு வாரியம் என்ற அரசுத்துறை உண்டு. சமயத்தின் அடிப்படையில் இங்கே என்ன பாரபட்சம் உள்ளது என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோயில்களை ஆக்கிரமித்த மாநில அரசு
தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, `கோயில்களின் சொத்துகளையும், வருமானங்களையும் மாநில அரசு முறைகேடாகப் பயன்படுகிறது. கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும் , சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களை மாநில அரசு தொடுவதில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி வெளியிட்ட அறிக்கையில், தென் மாநிலங்களில் இந்து கோயில்களை மாநில அரசாங்கம் வலுக்கட்டாயமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, கோயில் சொத்துகளையும், அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தையும் முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறது என்று தெலங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தேவையற்ற சர்ச்சையை எழுப்பியிருக்கிறார்.
தமிழகத்தில் ஆன்மிக புரட்சி
தமிழகத்தில் உள்ள கோயில்களில் எந்த பாகுபாடும், தவறுகளும், தனிப்பட்ட சிலருடைய ஆதிக்கத்தையும் தடுத்து நிறுத்துகிற வகையில் இந்து சமய அறநிலையத்துறை இந்தியாவிற்கே முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை முதலமைச்சராக திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு இந்து கோயில்களில் ஒரு ஆன்மீகப் புரட்சியே நடைபெற்று வருகிறது. கோயிலுக்குள் அனைத்து ஜாதியினரும் வேறுபாடின்றி உள்ளே நுழைந்து வழிபடுகிற உரிமையை பறிக்கிற வகையில் பிரதமர் மோடி பேசியிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.
கலவரங்களை உருவாக்க திட்டம்
கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை இருப்பதைப் போல, பள்ளிவாசல் மற்றும் தர்காக்களுக்கு வக்பு வாரியம் என்ற அரசுத்துறை உண்டு. சமயத்தின் அடிப்படையில் இங்கே என்ன பாரபட்சம் உள்ளது என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும். அமைதி பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் மதமாச்சாயங்களை உருவாக்கி, வகுப்புவாத கலவரங்களுக்கு தூபம் போட்டு பா.ஜ.க.வை வளர்த்துவிடலாம் என்ற பிரதமர் மோடியின் கனவு என்றைக்கும், எந்த காலத்திலும் நிறைவேறாது என கேஎஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
பாஜகதான் அதிமுகவின் வெற்றிக்கு தடை என இப்போ தான் தெரியுதா.? மாஜி அமைச்சரை விளாசிய கரு.நாகராஜ்