
பணப்பட்டுவாடா குறித்த புகார் காரணமாக, நாளை மறுதினம் நடக்கவிருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் கூறியுள்ள கருத்துக்கள் பின்வருமாறு:-
ஜனநாயக படுகொலை: தினகரன்
ஆர்.கே.நகரில் தேர்தலை நிறுத்தியது ஜனநாயக படுகொலை என்று தினகரன் கூறியுள்ளார். தாம் வெற்றி பெற்றுவிடுவேன் என்பதை அறிந்தே தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க கூடாது என்ற நிலையை உருவாக்கவே தேர்தல் ரத்து: ஓ.பி.எஸ்
வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளது; மிக விரைவில் தேர்தல் நடைபெறும்.வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கவே தேர்தல் ரத்து செய்யபட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவேண்டும்: தீபா
தேர்தலில் ரத்துசெய்து பயன் இல்லை, பணத்தால் தேர்தலில் வெற்றி பெற நினைக்கும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தீபா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
பண பட்டுவாடாவுக்கு பதிலடி: தமிழிசை
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வரவேற்கதக்கது. குறிப்பாக நேர்மயைாக தேர்தல் நடத்தும் சூழ்நிலையில் வரும் போது தேர்தல் நடத்தப்படும் என அறிவித்திருப்பது, மீண்டும் தேர்தல் நடந்தால் பணப்பட்டுவாடா நடக்கும் என கூறியவர்களுக்கு பதிலடி என்று தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகரில் பட்டுவாடா செய்யப்பட்டது நல்ல பணமா? ப.சிதம்பரம்
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையானது கருப்பு பணத்தை முடிவுக்கு கொண்டு வந்து உள்ளது என்று நம்மிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆ.கே.நகரில் பட்டுவாடா செய்யப்பட்டது நல்ல பணமா? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
தேர்தல் ரத்தானதால் எந்த பயனும் இல்லை: திருமாவளவன்
தேர்தல் ரத்தால் எந்த பயனும் இல்லை. தேர்தல் நடைமுறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் கடைசி நேரத்தில் பணப்பட்டுவாடாவை கண்டு பிடித்ததை போல் ரத்து செய்தது வேதனை அளிக்கிறது. வெளியூர் ஆட்களை ஆர்.கே.நகரில் இருந்து தேர்தல் ஆணையத்தால் கடைசி வரை வெளியேற்ற முடியவில்லை