திமுக மூத்த அமைச்சர்கள் சூழ்ந்து நிற்கும் நிலையில் பிரதமர் மோடியை கும்பிட்டவாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிற்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் பிகரப்பட்டு வருகிறது.
திமுக மூத்த அமைச்சர்கள் சூழ்ந்து நிற்கும் நிலையில் பிரதமர் மோடியை கும்பிட்டவாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிற்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் பிகரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் பல வகையாக விமர்சனத்தையும் கருத்துக்களையும் பெற்று வருகிறது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருகை தந்த நிலையில் திமுக அமைச்சர்கள் அருகில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரை வரவேற்ற நிலையில் இப்புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையின் கீழ் இயங்கிவந்த அதிமுக இரண்டாக பிரிந்து நிற்கிறது, கடந்த 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்து முக்கிய ஆவணங்களை அள்ளிச் சென்றார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது, பின்னர் அது கலவரமாக மாறியது, இந்நிலையில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே கட்சியை கைப்பற்றும் போட்டி நடந்து வருகிறது, இருவரும் மாரி மாரி கட்சி நிர்வாகிகளை நீக்கி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: தடைகளை எல்லாம் வாய்ப்புகளாக மாற்றி இந்தியா முன்னேறி வருகிறது - பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியிடம் காட்சி தலைமை அலுவலக சாவியை ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது, இது ஓ. பன்னீர் செல்வத்திற்கு பின்னடைவாக மாறியுள்ளது. மொத்தத்தில் அதிமுகவில் குழப்பமான சூழலில் இருந்து வருகிறது, இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் தமிழகம் வருகை தந்துள்ளார். இந்நிலையில் பிரதமரை சந்திப்பதற்கு ஓபிஎஸ் இபிஎஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது, இருவரும் ஒரே நேரத்தில் பிரதமரை வரவேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் பிரதமரை ஈபிஎஸ் வரவேற்பார் என்றும் ஓபிஎஸ் அனுப்பி வைப்பார் என்றும் தகவல் வெளியானது.
இதையும் படியுங்கள்: ஓபிஎஸ்-இபிஎஸ் சமரசத்திற்கு தயாரா..? உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வியால் பரபரப்பு..காரசார விவாதத்தின் தகவல் இதோ...
இதேபோல் நேற்று மாலை சென்னை விமான நிலையம் வந்திருந்த பிரதமர் மோடியை இபிஎஸ் வரவேற்றார், முன்னதாக பிரதமரை வரவேற்ப பாஜக சார்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது, அதில் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடியை வரவேற்க விமான நிலையம் வருகை தந்திருந்தனர். சென்னை விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடியை தமிழக அரசு சார்பாக மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என் நேரு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பொருளாளர் டி ஆர் பாலு உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜக முக்கிய தலைவர்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் மோடி வரவேற்றனர்.
இந்நிலையில் இது தொடர்பான புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது, அதில் பிரதமர் மோடியை வரவேற்க திமுக சீனியர்கள் துரைமுருகன், பொன்முடி, டி.ஆர் பாலு ஆகியோர் சுழ்ந்து நிற்கும் நிலையில் அவர்களுக்கு நடுவில் எடப்பாடி பழனிச்சாமி தனி ஆளாக பிரதமரை கையெடுத்து கும்பிட்டவாறு நிற்கிறார், அப்போது பிரதமர் மோடி தனது கையால் எடப்பாடி பழனிச்சாமியின் கைகளை பற்றியுள்ளதை போல அந்தப் புகைப்படம் அமைந்துள்ளது. பலரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். இதற்கு பலரும் பல வகையில் கருத்து கூறி வருகின்றனர். இந்த புகைப்படம் பல விமர்சனத்தையும் கருத்தையும் ஏற்படுத்தி வருகிறது.