தமிழகத்தில் 4 பேருக்கு குரங்கு அம்மை? அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுவது என்ன? பரபரப்பு தகவல்..!

By vinoth kumar  |  First Published Jul 29, 2022, 2:04 PM IST

கன்னியாகுமரியில் 4 பேருக்கு குரங்கு அம்மை அறிகுறிகளுடன் 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 


கன்னியாகுமரியில் 4 பேருக்கு குரங்கு அம்மை அறிகுறிகளுடன் 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  

கொரோனாவை தொடர்ந்து உலக நாடுகளை குரங்கு அம்மை நோய் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த 3 பேருக்கும், டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கும் குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த 4 பேருக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்துள்ளது. மேலும் அவர்களுடைய உடலில் பல இடங்களில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுவதைப்போன்ற தடிப்புகளும் இருந்ததாக கூறப்படுகிறது. 

Latest Videos

இதனால் 4 பேரும் சந்தேகத்தின் பேரில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 4 பேருக்கும் குரங்கம்மை நோய் அறிகுறிகள் இருப்பதால் அவர்களை தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் 4 பேருடைய ரத்த மாதிரிகளும் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

undefined

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கன்னியாகுமரில் குரங்கு அம்மை அறிகுறி என்று வெளியான தகவல் உண்மை இல்லை. குரங்கு அம்மை நோய் குறித்து யூகங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. குரங்கு அம்மை நோய் பாதிப்பு தொடர்பான தகவலை முறையாக பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். கனடா மற்றும் அமெரிக்காவில் இருந்து வந்தவர்களின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

click me!