
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி., தூய்மை இந்தியா இயக்கம், கறுப்புப் பண ஒழிப்பு என மத்திய அரசின் சில கொள்கை முடிவுகளுக்கு தனது ஆதரவைத் தெரிவித்து அதற்காக வாய்ஸ் கொடுத்தவர் நடிகர் ரஜினி காந்த். அவருடைய எண்ணமும், சமூகப் பார்வையும் ஆன்மிக நேர்மையும் அவர் அரசியலுக்கு வருவதற்கு அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் பலரும் பச்சைக்கொடி காட்டுவதற்குக் காரணமாக அமைந்தவை.
ஆனால், ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்தோ, நேர்மாறாக சில விஷயங்களில் பேர் எடுத்துவருகிறார். அவர் நடத்தும் ஆஷ்ரம் பள்ளிகளில் எழுந்த பிரச்னைகள் அண்மைக் காலமாக பரவலாகப் பேசப்பட்டவையே! இந்நிலையில் இன்னுமொரு பிரச்னையிலும் இப்போது சிக்கிக் கொண்டுள்ளார் மேடம் லதா ரஜினிகாந்த்.
ஆழ்வார்பேட்டையில் லதா ரஜினிகாந்த் நடத்தும் ட்ராவல் ஏஜென்சி கட்டிடத்துக்கான வாடகையை கார்பொரேஷன் ரூ.3,702/-லிருந்து ரூ. 21,160/- ஆக உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை அணுகியுள்ளார் லதா ரஜினிகாந்த்.
இதற்கு அவர் சொன்ன காரணம் தான் இப்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டிமானிடைசேஷன், ஜிஎஸ்டி வரி விதிப்பு, மார்க்கெட் நிலவரம் ரொம்ப மோசமாக இருப்பது, ஆன்லைன் வியாபாரம் இவற்றால் ஏற்கெனவே மிகவும் பாதிக்கப்பட்டு, குறைந்த லாபத்தில் நடத்தி வருவதால் இந்த வாடகை ஏற்றம் தொழிலை மிகவும் பாதிக்கும்.. என்று கூறி, மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு குறித்த விவரத்தைப் பார்த்ததும் சமூக வலைத்தளங்களில் கேள்விகள் பல எழுப்புகின்றனர் நெட்டிசன்கள்.
அங்க உங்க வீட்டுக்காரர் ஒரு படத்துக்கு 80 கோடி வாங்குறாரு.... நீங்க நடத்துற பள்ளிக்கூடத்துக்கு வாடகையே குடுக்குறதில்ல... வேலை செய்றவங்களுக்கு சம்பளம் குடுக்குறதில்ல.... அதை விட கொடுமை.... லட்சக் கணக்கில வாடகைக்கி போற இவ்ளோ மெயின் லொகேஷன்ல ஆபீஸ் வச்சுக்கிட்டு அதுக்கு மூவாயிரத்து சொச்சம் ரூவா வாடகை குடுத்து இத்தனை நாள் பொழப்ப ஓட்டிட்டு.... இப்போ வாடகையை ஏத்தினா குடுக்குறதுக்கு வலிக்குதா உங்களுக்கு..? விட்டா சோத்துக்கே கஷ்டப்படுறோம்னு புலம்புவாஹ போல....
இந்த லட்சணத்தில் சிவாஜிராவ் கெய்க்வாட் அரசியலுக்கு வந்து ஒரே கிழியா கிழிக்க போறாரு தமிழ்நாட்டு மக்களுக்கு..! எல்லாம் நேரம்டா சாமீ! என்று காலை வாருகிறார்கள் சமூக வலைத்தளங்களில்!