BREAKING: அமைச்சர் பொன்முடி மீதான நில அபகரிப்பு வழக்கு... சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

Published : Jul 06, 2023, 10:46 AM ISTUpdated : Jul 06, 2023, 11:04 AM IST
BREAKING: அமைச்சர் பொன்முடி மீதான நில அபகரிப்பு வழக்கு... சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

சுருக்கம்

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான நில அபகரிப்பு வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்க உள்ளது. 

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுவதாக சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்க உள்ளது. 

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து வருபவர் பொன்முடி. இவர், கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி இடத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டதாக புகார் எழுந்தது.

இதையும் படிங்க;- மதுரை உயர் நீதிமன்றக் கிளை கலைஞர் போட்ட பிச்சை.. உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டேன்.. வருத்தம் தெரிவித்த எ.வ.வேலு!

அதாவது பொன்முடி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அந்த இடத்தில் சட்டவிரோதமாக குடியிருந்து வந்த கண்ணன் என்ற கண்ணப்பனை வெளியேற்றி விட்டு போலி ஆவணங்களை தயாரித்து பொன்முடியின் மாமியார் சரஸ்வதி பெயரில் அந்த இடத்தை பதிவு செய்து ரூ.35 லட்சம் மதிப்பில் அங்கு கட்டிடம் கட்டியதாக கடந்த 2003-ம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி, பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, சைதை கிட்டு உள்ளிட்ட 10 பேர் மீது 27-08-2003ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  விசாரணையை முடித்து 2.9.2004 அன்று பொன்முடி உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 

இதையும் படிங்க;-  வாக்களித்த பொதுமக்களை கொச்சைப்படுத்துவது திமுகவுக்கு வாடிக்கையாக போச்சு! வேலுவுக்கு எதிராக சீறும் அண்ணாமலை.!

இந்நிலையில்,  இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி பொன்முடி அதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட விசாரித்த நீதிமன்றம் ஏப்ரல் 26ம் 2007ம் ஆண்டு பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. ஆனால், இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை 2017ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி அதிரடியாக ரத்து செய்தது. 

இதைத்தொடர்ந்து பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீதான வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சார் பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு ஆகியோர் உயிரிழந்துவிட்டனர். மற்ற 7 பேர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது. முன்னாள் ஆட்சியர் ராஜரத்தினம் உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில்  நீதிபதி ஜெயவேல் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க;-   திமுகவினரின் செருப்பைக்கூட தொட முடியாது... ஆளுநர் வேறு வேலைக்கு செல்லலாம் - ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்

அதில், நில அபகரிப்பு தொடர்பாக  அமைச்சர் பொன்முடி, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி ஜெயவேல் தீர்ப்பு வழங்கியுள்ளார். குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்படாததால் விடுதலை செய்யப்படுவதாக கூறியுள்ளார். 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!
என்னையா முடக்க பாக்குறீங்க.. அதுஒருபோதும் நடக்காது.. திமுக அரசை அட்டாக் செய்து விஜய் ட்வீட்!