அவங்க டெபாசிட்ட இழக்குறதுக்கு நாங்க சீட்டு தரணுமா? காங்கிரசை பங்கம் செய்த லாலு..!

Published : Oct 25, 2021, 05:29 PM IST
அவங்க டெபாசிட்ட இழக்குறதுக்கு நாங்க சீட்டு தரணுமா? காங்கிரசை பங்கம் செய்த லாலு..!

சுருக்கம்

பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்டிரீய ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி நூலிழையில் வெற்றியை பறிகொடுத்தது. 

பீகார் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு தொகுதி அளித்தால் அவர்களால், டெபாசிட் கூட வாங்க முடியாது என ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்டிரீய ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி நூலிழையில் வெற்றியை பறிகொடுத்தது. இதற்கு காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் கொடுத்ததும், பெரும்பாலான இடங்களில் அக்கட்சி தோல்வி அடைந்ததும்தான் காரணம் என்று அப்போதே பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. 

இந்நிலையில், பீகாரில், ஆளும் ஐக்கிய ஜனதாதளம் வெற்றி பெற்றிருந்த 2 தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் மரணம் அடைந்ததால், காலியாக உள்ள அத்தொகுதிகளுக்கு 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில், குஷேஷ்வர் அஸ்தான் என்ற தொகுதி, கடந்த ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு தோற்ற தொகுதிகளாகும். இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் போட்டி வேட்பாளர்களை அறிவித்தது.

இந்நிலையில், சிறையில் இருந்து வெளிவந்த பிறகு டெல்லியில் தங்கி சிகிச்சை பெற்று வரும் ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லல்லுபிரசாத் யாதவிடம் காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, என்னது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியா, இனிமேலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால், எங்கள் கட்சிக்கு டெபாசிட் கூட கிடைக்காது. எதற்காக அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும். தேசிய என்று ஒரு இடம் கொடுத்து டெபாசிட் இழப்தற்காகவா? எனக்கு உடல் நலம் சரியில்லை. மருத்துவர்கள் அனுமதித்தால் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' 10 கேள்விகள்.. அடுத்த விசாரணை எப்போது?
அன்பில் மகேஷ் குக்கர்..! கே.என்.நேரு சாமான் செட்..! திமுகவின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!