சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தியவர் ஓபிஎஸ்தான்.. ஒருங்கிணைப்பாளரை ஓங்கி அடித்த ஜெயக்குமார்.

By Ezhilarasan BabuFirst Published Oct 25, 2021, 4:24 PM IST
Highlights

அதேபோல் சசிகலா மற்றும் அவர் சார்த்தவர்களுடன் யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என ஏற்கனவே எச்சரித்திருந்தவர்தான் ஓபிஎஸ்தான் என்றார், சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியவரும் அவர்தான் என்றார்

சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என முதலில் கூறியவர் ஓபிஎஸ்தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சசிகலாவை கட்சியில் சேர்ப்பது தொடர்பாக தலைமை கழக நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள் என்று ஓபிஎஸ் தெரிவித்த நிலையில், ஜெயக்குமார் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். தமிழக அரசியலில் சசிகலா அதிமுக விவகாரம் மீண்டும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. அதிமுகவை கைப்பற்றியே தீருவோம் என்ற முழக்கத்துடன் சசிகலா தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். ஆனால் அதிமுகவுக்கும், சசிகலாவுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்றும், அவ்வளவு ஏன் அவர் அதிமுக என்ற கட்சியில் இல்லவே இல்லை எனவும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் திட்டவட்டமாக கூறிவருகின்றனர். 

இந்நிலையில் இன்று திடீரென செய்தியாளர்களிடம் பேசிய ஓ .பன்னீர் செல்வம், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அவர்கள் வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றார், அதைபோல் சசிகலா அவர்களை கட்சியில் இணைப்பது தொடர்பாக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்றார். தான் ஏற்கனவே கூறிய அதேகருத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதாவது எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் ஜெயக்குமார் போன்றோர்  சசிகலாவை மீண்டும் கட்சியின் இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறி வரும் நிலையில் அவரை கட்சியில் இணைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியிருப்பது அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் அதிமுக தொண்டர்களை குழப்பமடையவும் வைத்துள்ளது. அதே நேரத்தில் இபிஎஸ்- ஓபிஎஸ் இடையேயான பனிப்போர் பகிரங்கமாக பொதுவெளிக்கு வரத்தொடங்கி விட்டது என்பதையும் இது காட்டுகிறது. 

இதையும் படியுங்கள் : ஆசை வார்த்தைகளை நம்பி தேமுதிகவை விட்டு செல்வது கட்சிக்கு செய்யும் துரோகம்.. கதறும் கேப்டன் விஜயகாந்த்.

இந்நிலையில் தொடர்ந்து சசிகலாவை விமர்சித்து பேசி வரும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சசிகலா குறித்து ஓபிஎஸ் என்ன பேசினார் என்பது தனக்கு தெரியாது என்றும், அந்த பேச்சை முழுமையாக கேட்டுவிட்டு பிறகு கருத்து செல்கிறேன் என்றும் கூறினார். ஆனால் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற ஜெயக்குமார், அதிமுக என்பது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது, இணை ஒருங்கிணைப்பாளர் என்பதும் ஒருங்கிணைப்பாளர் தான் என்றார். 

இதையும் படியுங்கள் : இந்திய இளைஞர்களை கவர்ந்த பண்பாளர் நீங்கள்.. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கெத்தா வழ்த்து கூறிய ஆளுநர் R.N.ரவி.

அதேபோல் சசிகலா மற்றும் அவர் சார்த்தவர்களுடன் யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என ஏற்கனவே எச்சரித்திருந்தவர்தான் ஓபிஎஸ்தான் என்றார், சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியவரும் அவர்தான் என்றார். தன்னை பொறுத்தவரையில் கடந்த காலத்தில் கட்சியின் நிலைபாடு என்னவோ அதைத்தான் தான் கூறினேன் என்றும்,  அப்போது கூறியதுதான் இப்போதும் என்னுடைய நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார். மொத்தத்தால்  ஓபிஎஸ்சை எச்சரிக்கும் தொனியில் ஜெயக்குமாரின் பேச்சு இருப்பதை பார்க்க முடிகிறது. ஒருவேளை ஓபிஎஸ் சசிகலாவை ஆதரிக்கும் நிலைமே வந்தாலும்  ஒபிஎஸ்சுக்கு எதிராக நிலைபாடு எடுக்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தயங்காது என்பது இதன் மூலம் தெரிகிறது. 
 

click me!