தமிழகத்தில் பாஜக அசுர வளர்ச்சி... பெரிய கட்சியா.? இல்லையா.? ஜூன் 4ஆம் தேதி அதிமுகவிற்கு தெரியும்- எல்.முருகன்

By Ajmal KhanFirst Published Mar 29, 2024, 7:33 AM IST
Highlights

பிரதமர் மோடி தர்மத்தின் பக்கமும்,  ஸ்டாலின் அதர்மத்தின் பக்கமும்  இருப்பதாக தெரிவித்த எல்.முருகன், நீலகிரியில் இந்த தேர்தல் 2 ஜியா, மோடிஜியா என்ற கேள்வியுடன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என தெரிவித்தார். 
 

தமிழகத்தில் பெரிய கட்சி யார்.?

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு கட்சியும் எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் தமிழகத்தில் பாஜகவுடன் இருந்த கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சி யார் என விவாதம் நடத்தி வருகிறது.

தமிழகத்தில் அதிமுகவை விட பாஜக மிகப்பெரிய கட்சியாக வளர்ந்துள்ளதாக பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர். இதற்கு அதிமுகவினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். பாஜக தலைவர்களால் பூத் கமிட்டி கூட அமைக்க முடியவில்லையென கூறி வருகின்றனர். இந்த நிலையில், பாஜக பெரிய கட்சியா.? இல்லையா என்பதை அதிமுகவிற்கு ஜூன் 4ஆம் தேதி தெரியும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

யார் பெரிய கட்சி.?

நீலகிரி தொகுதியில் போட்டியிடும் எல்.முருகன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பின் போது பேசிய அவர்,  சமூக நீதியை பற்றி பேச முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது என தெரிவித்தார். ஜூன் 4 ஆம்தேதி பாஜக பெரிய கட்சியா? இல்லையா? என்பது பற்றி அதிமுகவிற்கு தெரிய வரும் என எல்.முருகன் காட்டமாக கூறினார். எந்தெந்த கட்சி, எந்த நிலையில் உள்ளது என்று ஜூன் 4 ம் தேதி தெரியும் எனவும் தெரிவித்தார்.  

பாரதிய ஜனதா கட்சி இன்றைக்கு தமிழகத்தில் ஒரு அசுர வளர்ச்சியோடு மிகப் பிரதான கட்சியாக வளர்ந்து வருகிறது. எங்களுடைய பிரதமர் நரேந்திர மோடி இன்றைக்கு தமிழ்நாட்டு மக்கள் மேல்  அளவுக்கு அதிக பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்,அது தேர்தல் முடிவு வரும் போது தெரியும் என எல்.முருகன் கூறினார்.  

இதையும் படியுங்கள்

வங்கி கணக்கில் 0 பேலன்ஸ்... குண்டுமணி தங்கம் கூட இல்லை- திருமாவளவனின் சொத்து பட்டியலில் வெளியான ஷாக் தகவல்
 

click me!