நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு போடும் ஓட்டு குப்பை தொட்டியில் போடுவதற்கு சமம்.! ஜி.கே.வாசன் ஆவேசம்

By Ajmal Khan  |  First Published Mar 29, 2024, 6:08 AM IST

 மோடி 3வது முறையாக பிரதமராகும் போது புதுச்சேரியின் பிரதிநிதியை அவரது பக்கத்தில் நீங்கள் அமர வைக்கவேண்டும் எனவே உங்கள் வாக்கு வீணாக்க கூடது என ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார். 
 


புதுவையில் காமராஜர் ஆட்சி

நாடாளுமன்ற தேர்தலையோட்டி பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் புதுச்சேரி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நாமசிவயத்தை ஆதரித்து  லாஸ்பேட்டை பகுதியில் G.K. வாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்,

Latest Videos

undefined

அப்போது பொதுமக்கள் மத்தியில் வாக்குகள் சேகரித்து பேசிய அவர், தமிகத்தில் காமராஜர் ஆட்சி அமைக்க பாடுபட்டு வருகிறோம், ஆனால் புதுச்சேரியில் காமராஜர் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற ஆட்சியை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கி வருவதாகவும்,  இந்தியாவில் மாநிலங்கள் வரிசையில் முதலில் அமரகூடிய தகுதி  புதுச்சேரிக்கு  மட்டுமே உள்ளது என தெரிவித்தார். 

மின் மிகை மாநிலம்

புதுச்சேரி மின்மிகை மாநிலமாக உள்ளது, 100% மின்சாரத்தை வழங்க கூடிய அரசாக இந்த அரசு உள்ளது. இதனால் சிறு, குறு தொழில்கள் வளம்பெற முடியும். இப்படி புதுச்சேரியின் சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். பிரதமரின் சாதனைகளை இரவு முழுவதும் பேசலாம். வருங்கால புதுவையை வளமான புதுவையாக மாற்றக்கூடிய அரசாக இந்த அரசு செயல்படுகிறது என்றவர், மாணவர்கள் படிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்த செய்து கொடுக்கிறது,  லேப்டாப், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது என குறிப்பிட்டார்.

அதிமுகவிற்கு வாக்கு - குப்பை தொட்டி வாக்கு

கல்வியில் சிறிய மாநிலங்களில் முதன்மையான மாநிலமாக புதுச்சேரி உள்ளதாகவும், இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற அரசாக மத்திய அரசு உள்ளதாகவும் கூறினார். மீண்டும் மோடி 3வது முறையாக பிரதமராகும் போது புதுச்சேரியின் பிரதிநிதியை அவரது பக்கத்தில் நீங்கள் அமர வைக்கவேண்டும், உங்கள் வாக்கு வீணாக கூடது, உங்கள் வாக்கு புதுச்சேரிக்கு நன்மை பயக்கும் வகையில் இருக்க வேண்டும் என கூறிய அவர், காங்கிரஸ், அதிமுகவுக்கு வாக்கு போட்டல் அந்த வாக்கு குப்பை தொட்டியில் போட்ட வாக்காக மாறிவிடும் என தெரிவித்தார் 

இதையு்ம் படியுங்கள்

மோடி எத்தனைமுறை தமிழகம் வந்தாலும் பாஜகவிற்கு யாரும் வாக்களிக்கப் போவதில்லை - தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி!

click me!