பன்னீர்செல்வத்திற்கு கொரோனா பாதிப்பு.. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை.. அதிர்ச்சியில் தலைமை..!

By vinoth kumarFirst Published Mar 30, 2021, 10:55 AM IST
Highlights

கடலூர் குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதன்படி நேற்று புதிதாக 2,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,81,752ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் போட்டியிடுகிறார். இதற்கான தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டு வந்தார். அப்போது, உடல் சோர்வு அடைந்ததையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானதையடுத்து  சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஏற்கனவே தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி, அழகாபுரம் தொகுதி மோகன்ராஜ், மக்கள் நீதி மய்யம் வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபு, அண்ணா நகர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்ராஜ் ஆகியோருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!