பிரதமர் மோடி வரும்போதெல்லாம் இதேவேலைதானா..? கடுப்பில் பாஜக..!

By Thiraviaraj RMFirst Published Mar 30, 2021, 10:52 AM IST
Highlights

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பரப்புரை மேற்கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்து சேர்ந்துள்ள நிலையில் #GoBackModi eன்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
 

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பரப்புரை மேற்கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்து சேர்ந்துள்ள நிலையில் #GoBackModi eன்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

இன்று காலை விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்து சேர்ந்த மோடி காலை 11 மணிக்கு கேரள மாநிலம் பாலக்காட்டில் பரப்புரை செய்கிறார். கேரளாவில் பாஜக வலுவாக உள்ள இடங்களில் ஒன்றாக பாலக்காடு கருதப்படுகிறது. சமீபத்தில் நடந்த கேரளா உள்ளாட்சித் தேர்தலில் பாலக்காடு நகராட்சியை பாஜக கைப்பற்றியது.

அடுத்ததாக பகல் 12.50 மணிக்கு தாராபுரம் வரும் மோடி, அந்தத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கு ஆதரவாகப் பரப்புரை செய்யவுள்ளார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதன் பின்னர் மாலை 4 மணியளவில் புதுச்சேரி சென்று பாஜக - அதிமுக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார் நரேந்திர மோடி. இந்நிலையில், வழக்கம்போலவே இன்றும் #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் சமூக ஊடகத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதற்கு எதிராக நரேந்திர மோடின் ஆதரவாளர்கள் #TNWithPMModi என்ற ஹேஷ்டேகைப் பயன்படுத்தி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

click me!