நான் விவாதத்திற்கு அழைத்தால் ஸ்டாலின் வர மறுக்கிறார்.. அவரிடம் திறமை இல்லை.. அடித்து தூக்கும் எடப்பாடி.

By Ezhilarasan BabuFirst Published Mar 30, 2021, 10:45 AM IST
Highlights

முதலமைச்சர் மீது புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் படித்து பார்த்து புகார் தெரிவிக்க வேண்டும், சிறப்பான நிர்வாகம் தமிழகத்தில் நடைபெறுகிறது. ஊழல் புகார்கள் குறித்து விவாதம் நடத்த தயார்,எந்த இடமாக இருந்தாலும் தயார்,அதற்கு மக்கள் நீதிபதியாக இருக்கட்டும்
 

சென்னை அண்ணா நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் கோகுல இந்திரா அவர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிஎம்டிஏ காலனி பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தொகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். திண்டுக்கல் லியோனி பெண்களை கீழ்த்தரமாக கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்.பெண்களை இழிவு படுத்தி பேசுபவர்களை தட்டுக்கேட்க திராணி இல்லாத தலைவர் ஸ்டாலின்.பெண்களை இழிவு படுத்தும் திமுகவிற்கு இந்த தேர்தல் தகுந்த பாடம் புகட்டப்படும்.பல்வேறு சோதனைகளை சந்தித்து வென்ற கட்சி அதிமுக.ஆட்சியை கலைக்க திமுக முயன்றது. எம்ஜிஆர் சட்டப்பேரவையில் பேச திமுக அனுமதிக்காமல் மறுத்தது.  

இந்த சட்டப்பேரவைக்கு மீண்டும் வந்தால் முதல்வராகதான் வருவேன் என கூறி வெளியேறி, முதலமைச்சராக வந்தார் எம்ஜிஆர். திமுக அராஜக கட்சி, சட்டமன்றம் என்பது ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டிய இடம். ஆனால் திமுகவினர் அங்கு அராஜகம் செய்கின்றனர். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை எவ்வாறு சட்டமன்றத்தில் அவமதித்து அராஜகம் செய்ததோ அதைவிட அதிகமாக தான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நேரத்தில் அராஜகம் செய்தனர். சட்டமன்றத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நடனம் ஆடி அராஜகம் செய்தனர்.
பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட பொழுது ஸ்டாலின் சட்டையை கிழித்து வந்தது போல மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டையை கிழித்துக் கொண்டு அலைய போகிறார. 

முதலமைச்சர் மீது புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் படித்து பார்த்து புகார் தெரிவிக்க வேண்டும், சிறப்பான நிர்வாகம் தமிழகத்தில் நடைபெறுகிறது. ஊழல் புகார்கள் குறித்து விவாதம் நடத்த தயார், எந்த இடமாக இருந்தாலும் தயார், அதற்கு மக்கள் நீதிபதியாக இருக்கட்டும் ஆனால் ஸ்டாலின் வர மறுக்கிறார். ஏனென்றால் அவருக்கு திறமை இல்லை, 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இருந்த பொழுது மாநகராட்சியை கொள்ளைடித்தது ஒன்று தான் அவரது திறமை. பதவியில் இருக்கும் பொழுது நாட்டு மக்களை பார்க்காமல், வீட்டு மக்களை மட்டுமே பார்த்தார்கள்.ஒரு வருடத்திற்கு மழை இல்லையென்றாலும் தடையின்றி நீர் வழங்க ஏரியில் சேமித்து வவைக்கப்பட்டுள்ளது.750 எம்எல்டி நீர் மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் ஏரி குளம் தூர்வாரப்பட்டு மழை நீர் சேகரிக்கப்பட்டுள்ளது.கடந்த 63 ஆண்டுகள் தண்ணீர் தேங்க ஏரி அமைக்கப்படவில்லை, அதிமுக அரசு தான் தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கம் உருவாக்கியது, சேமிக்கப்பட்டுள்ள தொகுதியில் இரண்டு தாலுக்கா உருவாக்கப்பட்டுள்ளது.62 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வெள்ளத் தடுப்பு பணி நிறைவு செய்யப்பட்டது. ஏராளமான சமுதாய நலக்கூடம், 330 தார் சாலை பணிகள், 20 பூங்காக்கள், அமைக்கப்பட்டுள்ளது. 8 அம்மா மினி கிளினிக் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 62 ஆயிரம் கோடி மதிப்பில் மெடெரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 
 

click me!