ஒரு வாரம் தான் டைம்..! அதற்குள் ராஜினாமா செய்யனும்.. இல்லைனா போராட்டம் ... எச்சரிக்கும் கே.எஸ் அழகிரி

By Ajmal KhanFirst Published Jun 7, 2023, 8:18 AM IST
Highlights

ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் ராஜினாமா செய்யவில்லை என்றால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்தும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

அரசின் துணையில்லாமல் நடக்க வாய்ப்பே இல்லை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். முன்னதாக பேசிய சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ், மணிப்பூரில் ஒட்டுமொத்த பழங்குடி மக்களையும் கிறிஸ்துவர்கள் என்று டார்கெட் செய்து இந்துத்துவாவை வளர்க்க அரசே துணை போயிருக்கிறது. இந்த விளைவு இன அழிப்பு என்ற நிலைக்கு தள்ளிவிட்டது. இது அரசின் துணையில்லாமல் நடக்க வாய்ப்பே இல்லையென குற்றம்சாட்டினார். செய்தியாளர்களை சந்தித்தார். இதனை தொடர்ந்து பேசிய கே.எஸ்.அழகிரி,  

வெளிநாடு சென்று முதலீடு ஈர்க்க கூடாதா?

மணிப்பூரில் மெய்தெய் சமூகத்துக்கும் பழங்குடியினருக்கும் இடையே நடந்து வரும் மோதல் மத்திய அரசின் ஆதரவோடு நடைபெறுவதாகவும், அரசின் நோக்கம் வெற்றிகரமாக நடைப்பெற்று வருவதாக கூறினார். வெளிநாடுகளுக்கு சென்றால் முதலீடு வராது என ஆளுநரின் கருத்து குறித்து பேசிய அழகிரி, தமிழக ஆளுநரின் ஒரே நோக்கம் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக கருத்து சொல்வதே நோக்கமாக கொண்டுள்ளார்.  முதலீடு ஈர்ப்பது குறித்து ஆளுநர் பேசியுள்ளார். உத்தர பிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டில் முதலீடு ஈர்க்கலாம் ஆனால் நாம் வெளிநாடு சென்று முதலீடு ஈர்க்க கூடாதா? தமிழ்நாட்டை பொறுத்தவரை நம்மிடம் அன்னிய மூலதனமும் கிடையாது அன்னிய தொழில்நுட்பமும் கிடையாது மனித வளம் மட்டுமே உள்ளது.

 இந்தியாவின் தொழில் வளர்ச்சி

தொழில்நுட்பமும் பணமும்.உடையவர்கள் மனித வளம் உள்ள நாட்டில் முதலீடு செய்கிறார்கள்.  ஆசிய நாடுகளில் அப்படி தான் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என கூறினார். மோடி வந்த பிறகு தான் இந்தியாவில் வளர்ச்சி வந்தது என சொல்வது தவறு எனவும், மோடி வந்த பிறகு தான் தொழில் வளர்ச்சி சரிந்துள்ளது ஜி.டி.பி குறைந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.  இந்தியாவின் தொழில் வளர்ச்சி என்பது நரசிம்மராவ், மன்மோகன் சிங், பா. சிதம்பரம் காலத்தில் தான் கொடிக்கட்டி பறந்ததாகவும், இந்த வரலாற்றை மறைக்க முயற்சிக்கிறார்கள் என கூறினார்.  ஒடிசா ரயில் விபத்துக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை. ஒரு விபத்து நடந்தால் அரசு பொறுப்பேற்க வேண்டும்.

ஒரு வார காலத்துக்குள் ராஜினாமா.?

இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை. ரயில்வே அமைச்சருக்கு ஆர் எஸ் எஸ் முகாம்களுக்கு செல்வதே நேரம் போதவில்லை என தகவல் வருகிறது. 10 ல் 7 ரயில் விபத்துகள் தண்டவாளம் பிரச்சனையால் ஏற்படுகிறது அந்த அளவுக்கு நிர்வாக சீர்கேடு உள்ளது இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணையை விட, உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். ராகுல் காந்தி அகில இந்திய தலைவராக இருந்த போது தேர்தலில் வெற்றி பெறாததால் பெருந்தன்மையுடன் ராஜினாமா செய்தார். அதை போல ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் ராஜினாமா செய்ய வேண்டும். ஒரு வார காலத்துக்குள் ராஜினாமா செய்யாவிட்டால் காங்கிரஸ் கட்சி அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஆர்பாட்டம் நடத்தும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். 

இதையும் படியுங்கள்

மதவாத பிரச்சினையை மணிப்பூரில் கொளுத்திப் போட்ட பாஜக.. சசிகாந்த் செந்தில் சொன்ன பரபரப்பு தகவல்

click me!