உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை அதிகார அத்துமீறல்.. பொங்கி எழும் முத்தரசன்..!

By vinoth kumarFirst Published Jun 7, 2023, 7:16 AM IST
Highlights

ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை கருத்தில் கொண்டு, மாறிவரும் சூழலுக்கு தக்கபடி பாடத்திட்டங்கள் அமைய வேண்டும் என்று பேசியிருக்கிறார். 

ஆளுநர் ரவி கூறிய கருத்து முதல்வர் ஸ்டாலினின் அரசு முறை பயணத்தை சிறுமைப்படுத்தும் வன்மம் கொண்டது என முத்தரசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

முதலீட்டை ஈர்க்க வெளிநாடு சென்று நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது. உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை தமிழக ஆளுநர்  ஆர்.என்.ரவி விமர்சித்திருந்தார். இந்நிலையில், ஆளுநர் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சி போல் செயல்படுகிறோர் என திமுக கூட்டணி கட்சிகள் கூறியுள்ளனர். 

இதையும் படிங்க;- தமிழக மக்களின் வரிப்பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் ஆளுநர்.!பாஜக கொள்கை பரப்புச் செயலாளராக செயல்படுவதா.? காங்.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உதகமண்டலம் ஆளுநர் மாளிகையில் நேற்று முன்தினம் பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. இம் மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை கருத்தில் கொண்டு, மாறிவரும் சூழலுக்கு தக்கபடி பாடத்திட்டங்கள் அமைய வேண்டும் என்று பேசியிருக்கிறார். 

தமிழ்நாடு அரசு மாநிலத்துக்கான தனித்துவம் வாய்ந்த கல்விக் கொள்கை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது அதற்கு இடையூறு செய்து, குழப்பம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவது ஏற்கதக்கதல்ல. அத்துடன், “நாம் வேண்டுகோள் விடுப்பதாலோ அல்லது அவர்களது நாடுகளுக்கு சென்று பேசுவதாலோ மட்டும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன்வரமாட்டார்கள்” என்று பேசியுள்ளார். அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, தமிழ்நாட்டில் நடத்தப்படும் சர்வதேச முதலீட்டார்கள் மாநாட்டிற்கு நேரில் அழைத்ததுடன், அங்கு ரூபாய் 3 ஆயிரத்து 233 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து திரும்பியுள்ள நிலையில் ஆளுநர் கூறிய கருத்து முதலமைச்சரின் அரசுமுறை பயணத்தை சிறுமைப்படுத்தும் வன்மம் கொண்டதாகும். 

இதையும் படிங்க;-  துணைவேந்தர் மாநாட்டை அரசியல் மாநாடாக மாற்றிய ஆளுநர்.! முழு நேர அரசியல் வாதியாகவே மாறிவிட்டார்- தங்கம் தென்னரசு

மாநில அரசின் அரசு கட்டமைப்பை வழிநடத்தும் அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிதிகளிடம் தான் இருக்கிறது. ஆளுநர்களிடம் இல்லை என உச்சநீதிமன்றம் தெளிவாக வரையறுத்து உத்தரவிட்ட பிறகும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை அதிகார அத்துமீறலாக தொடர்வதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது என முத்தரசன் கூறியுள்ளார்.

click me!