காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது.! ஸ்டாலினின் கருத்து இந்தியா முழுவதும் எதிரொலித்துள்ளது- கேஎஸ் அழகிரி

By Ajmal Khan  |  First Published Mar 2, 2023, 10:00 AM IST

அதிமுக தன்னம்பிக்கையில்லாத கட்சி, அதனை மக்கள் விரும்ப மாட்டார்கள் என தெரிவித்துள்ள காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ். அழகிரி ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகத்தான் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


மகத்தான் வெற்றி பெறும்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, ஈரோட்டில் மக்கள் எங்களுக்கே வாக்களித்துள்ளார்கள், கொள்கை சார்ந்த அரசியல் இயக்கமாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். அதிமுக தன்னம்பிக்கையில்லாத கட்சி, அதனை மக்கள் விரும்ப மாட்டார்கள் என கூறினார். ஈரோடு கிழக்கில் மக்களுக்கான திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

பாஜக எதிர்ப்பு தலைவர்களை ஒன்றினைக்க வேண்டிய நேரம் இது.! பிரதமர் பதவி பற்றி பின்னர் பேசிக்கலாம்- திருமாவளவன்

கட்சிகளை ஒருங்கிணைப்போம்

தேசிய தலைவர்கள் கலந்து கொண்ட தனது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது என சொல்லியிருப்பது ஆழம் நிறைந்தது. இந்தியா முழுவதும் எதிரொலித்துள்ளதாக கூறினார். ஒத்த கருத்துடன் உள்ள கட்சிகளை கூட்டணிக்குள் ஒருங்கிணைப்போம் எனவும்  தெரிவித்தார். சமையல் கேஸ் சிலிண்டர் விலையை பிரதமர் மோடி அரசு தொடர்ந்து உயர்த்துகிறது. அவரின் பொருளாதார கொள்கை என்ன என்பதை மோடி தான் விளக்கம் தர வேண்டும் என தெரிவித்தார்.  

இதையும் படியுங்கள்

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை! முதல் சுற்றிலையே 2000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்ற ஈவிகேஎஸ்

click me!