வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அரசியல் தலைவர்கள் வழங்கி வருகின்றனர். அதேபோல் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கி வந்தார்.
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17, 18 ஆகிய இரண்டு நாட்கள் வரலாறு காணாத வகையில் மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றது. இதனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அரசியல் தலைவர்கள் வழங்கி வருகின்றனர். அதேபோல் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கி வந்தார்.
undefined
இந்நிலையில், கிருஷ்ணசாமிக்கு திடீரென கடுமையான காய்ச்சல், இருமல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்று தொடர்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.