
தமிழக அரசு அறிவிக்க இருக்கும் குடிநீர் வடிகால் வாரியத் தலைவர் பதவியை ஓபிஎஸ் அணியின் கேபி முனுசாமி குரிவைப்பதால் அதிமுகவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது ஆனால் இதற்கு மேற்கு மாவட்டம் தயங்கி புள்ளிகள் தயங்குகிறது.
மைனாரிட்டி அரசு மைனாரிட்டி அரசு என யார் சொன்னாலும் மத்திய அரசின் முழுமையான தயவில் இருப்பதால் ஆட்சிக்கு எந்த பங்கமும் வரப்போவதில்லை இதில் எடப்பாடி அண்ட் கோ உறுதியாக இருக்கின்றனர். இதனால் கட்சி பதவி, பார் உரிமம், வாரியத் தலைவர் பதவி என அடுத்த கட்ட வேலைகளில் பிசியாக தொடங்கிவிட்டனர்.
சட்டசபை கூட்டத் தொடர் முடிந்த கையோடு எடப்பாடி அணியோடு இணைந்த ஓபிஎஸ் அணி, எதுவாக இருந்தாலும் கட்சிப்பதவி, ஆட்சிப்பதவி என சம பங்கு நிபந்தனை வைக்கும் முடிவில் இருக்கிறார்களாம் பன்னீர் அணியில் இருப்பவர்கள்.
ஆனால், மேற்கு மாவட்ட லாபியோ, கட்சி, ஆட்சி கையை விட்டு போகக் கூடாது என்பதற்காக 70-30 என பேரம் பேசிய ஒப்புக் கொள்ள வைத்தது. இதை ஓபிஎஸ் தரப்பும் ஏற்றது. அணிகள் இணைப்பு முடிந்த நிலையிலும் பேசியபடி எதுவும் நடக்காத நிலையில் ஓபிஎஸ் அணி தலைவர்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இந்த சமயத்தில் தான் நேற்று முன்தினம் கடிதம் ஒன்றை வெளியிட்ட அவைத்தலைவர் மதுசூதனன் எடப்படியாருக்கு பதினான்கு கேள்விகளை கேட்டிருக்கிறார் இதில் "நான் தோற்றதற்கு என்ன காரணம், யார் காரணம், பதில் சொல்லுங்கள் மிஸ்டர் பழனிசாமி? அம்மா மறைவுக்குப் பின்னர் கழகம் இரண்டானது. தொண்டர்கள் தவித்தனர். நாம் தனித்தனியாக இருவேறு அணியாகக் கிடந்தோம். அப்படிக் கிடந்த அணிகளை ஒன்றாக்கி கட்சியை வலுவாக்கியதுதான் நான் செய்த தவறா? நம்முடைய பிரிவால் எதிரிகள் வலுப்பெற்றுக் கழகத்தை சிதைத்து விடுவார்கள் என்று கருதி நானும் அண்ணன் கே.பி.முனுசாமியும்தானே இந்தப் பேச்சு வார்த்தைக்கே பாலம் அமைத்துக் கொடுத்தோம்? என்றும் இன்றும் ஓ.பி.எஸ். அணியிலிருந்து வந்தவர்களுக்குக் கட்சியில் எந்த முக்கியப் பொறுப்பும் கொடுக்கப்படாமல் இருக்கிறதே, வடசென்னை மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் அதுதானே உண்மை நிலவரம். இதை காலங்கடந்து போய் இனிமேல்தான் சரி செய்யப் போகிறீர்களா மிஸ்டர் முதல்வர் அவர்களே? கழக இணை ஒருங்கிணைப்பாளர் அவர்களே ? என நேற்றைய கடிதத்தில் எடப்பாடியாருக்கு கடிதத்தில் ஒரு எச்சரிக்கை கலந்து மிரட்டியிருந்தார்.
இந்நிலையில், பார் உரிமங்களை ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்புக்கு பிரித்து கொடுக்கப்பட இருக்கிறது. இதேபோல் வாரியத் தலைவர் பதவிக்கும் அடிதடி உருவாக இருக்கிறது. குடிநீர் வடிகால் வாரியம் அல்லது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைவர் பதவிகளை கைப்பற்றும் முயற்சியில் இருக்கிறாராம் ஓபிஎஸ் அணியின் இருக்கும் கே.பி. முனுசாமி. ஆனால் மேற்கு மாவட்டமோ, நாங்கள் சொல்கிற வாரியத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறதாம். ஆனால் பன்னீர் தரப்பு அதிருப்தியில் இருக்கிறதாம்.
இது போக நத்தம் விஸ்வநாதன் தரப்பும் வாரியத் தலைவர் பதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறதாம். வாரியம் இல்லையென்றாலும் பார் உரிமம் கிடைத்தாலே போதும் என நத்தம் தரப்பு நினைக்கிறதாம். வாரியத்தில் எழும் அதிருப்தியை பார் உரிமத்திலும் இரண்டும் கிடைக்காதவர்களுக்கு கட்சி பதவியிலும் இடம் கொடுத்து தாஜா செய்துவிடுவது எடப்பாடி அணியின் ப்ளானாம்.
ஏற்கனவே, பார் உரிமங்களை நடத்தி வந்தவர்களுக்கு மீண்டும் தர வேண்டாம் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதற்கு காரணமே அனைத்து மாவட்டங்களிலும் பார் உரிமங்களை வைத்திருந்தவர்கள் சசிகலா ஆதரவாளர்கள் என்பதால் பன்னீர் அணியிலிருக்கும் முனுசாமி அண்ட் நத்தம் விசுவின் வெளிப்படையான மூவ் என சொல்லப்படுகிறது.