“தினகரன் பண்றது எதுவுமே சரியில்ல...” சசியிடம் போட்டுக்கொடுத்த விவேக்.... பரப்பன ஆக்ராஹராவில் நடந்த பரபரப்பு....

 
Published : Jan 11, 2018, 04:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
“தினகரன் பண்றது எதுவுமே சரியில்ல...” சசியிடம் போட்டுக்கொடுத்த விவேக்.... பரப்பன ஆக்ராஹராவில் நடந்த பரபரப்பு....

சுருக்கம்

vivek meets sasikala at parappana agrahara prison

சசிகலாவை சந்திக்க “சில தினங்களுக்கு முன்பு சத்தமில்லாமல் பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்றிருக்கிறார் விவேக். அப்போது விவேக்கிடம் சசிகலா நிறைய விஷயங்களை மனம்விட்டுப் பேசியதாக சொல்கிறார்கள்.

ஜனவரி 3-ம் தேதி சசிகலாவைச் சந்திக்க விவேக் அவசர அவசரமாக தினகரனிடம் எதுவுமே சொல்லாமல் பரப்பன ஆக்ராஹார சிறைக்கு சென்றிருக்கிறார். அப்போது தனது அம்மா இளவரசியை முதலில் சந்தித்து பேசிவிட்டு அனுப்பிய பின் பிறகு சசிகலா வந்தாராம். இந்தமாதம் முழுவதும் சசிகலா சசியை பார்த்ததும் கைகளை பிடித்துகொண்டாராம் விவேக் கடைசியாக தினகரன் ஆர்.கே.நகர் வெற்றிக்குப்பின் வாழ்த்து பெற சென்ற சமயத்தில் அதிகமாக பேசியது விவேக்கைப்பற்றித்தானாம்.

மற்ற தொலைகாட்சிகள் என்னை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறையாவது காட்டிக்கொண்டு என்னுடைய செய்தியை போடுகிறார்கள். ஆனால், சொந்தமாக இருக்கும் நமது தொலைகாட்சியில் ஏதோ சம்பரதாயதுக்கு காட்டுவதைப்போல காட்டுகிறான். நான் வேண்டாம் வேண்டாம் என சொல்லியும் திமுக தலைமைநிலையாய செயலாளர் துரைமுருகன் பேட்டியை போட்டான். ஜெயா டி.வி-யில் பல விஷயங்கள் இதனால் தப்புத்தப்பாக நடக்கின்றன. அதுமட்டுமல்ல நான் போன் செய்தாலும் எடுப்பதில்லை. குருவித்தலையில் பனங்காய் வைப்பதுபோல பொறுப்புகளைச் செய்ய முடியாமல் திணறுகிறான்.

எனக்கு வேண்டிய சிலவற்றை நீங்கள் செய்துகொடுத்தால், நீங்கள் வெளியில் ஒருசில விஷயங்களை செய்து முடிப்பேன் என பேசியிருக்கிறார். இப்படி விவேக்கை பற்றி ஒட்டுமொத்தமாக புட்டு புட்டு வைத்துள்ளார். ஆனால் அப்போது தினகான் மீது கோபத்தில் இருந்ததால் எதுவும் பேசாமல் திருப்பி அனுப்பிவிட்டார் சசி. ஆனால் வெளியில் வந்த தினகரன் சின்னம்மா மௌனவிரதம் என புருடா விட்டுள்ளார். தினகரன் சொன்ன எல்லா விஷயங்களையும் விவேக்கிடம் சொன்ன சசிகலா, ‘நீ ஏன் தினகரனை மதிப்ப தில்லை? என்று கேட்டாராம். சசியின் கோபத்தில் கொந்தளித்த விவேக், ‘நீங்கள் சொல்வதை மட்டும்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன்.

நீங்கள்தான் அத்தானுக்கு பணம் தர வேண்டானு சொன்னீங்க. அதனால் நான் தரல. அவராக எப்போதும் பணம் கேட்டதில்லை. யார் யாரையோ அனுப்புவார். எனக்கு அத்தான் தகவலே சொல்ல மாட்டார். அவர் சொல்லித்தான் கேட்கிறார்கள் என எப்படி நம்பித் தருவது? நான் லண்டன் போயிருந்தபோது, அவர் போன் செய்திருக்கிறார். நான் வெளிநாடு போன விஷயம் தெரிந்து கொண்டே, அந்த நேரத்தில் போன் செய்துவிட்டு, நான் எடுக்கவில்லை என சொல்றார். உண்மையில் ஆட்சி மாற்றத்துக்கான எந்த நிலைமையும் தற்போது இல்லை. ‘ஆட்சியைக் கவிழ்த்துவிடுவேன்’, ஸ்லீப்பர் செல்ஸ் என்றே இவர் பேசிக்கொண்டிருப்பதால், ‘பதவி போய் விடும்’ என்ற பயத்தில் எம்.எல்.ஏ-நம்ம பக்கம் இதுவரைக்கும் ஒருத்தவங்க கூட வரல ஏற்கனவே வந்த எல்லோரும் ஏண்டா வந்தோம்னு ரொம்ப கோபத்துல இருக்காங்க.

அதுமட்டுமல்ல, டெல்லியில் உங்கள் வழக்குத் தொடர்பாக எந்த ஏற்பாடும் பன்னால. சரி அது இருக்கட்டும் அம்மா ஹாஸ்பிட்டல்ல இருந்த வீடியோவை யாரை கேட்டு வெளியிட்டாரு? கேட்ட எனக்கு தெரியாது வெற்றிவேல் வெளியிட்டுட்டாரு... அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்றாரு, அதை என்னிடம் சொல்லியிருந்தால் நானே நம்ம டிவியிலேயே முதல்ல வெளியிட்டுருப்பேன், அதைவிட்டுட்டு அவரோட சுயநலத்துக்காக அந்த வீடியோவை யூஸ் பண்ணிகிட்டாரு..., அதுமட்டும் இல்ல உங்களையும் அம்மாவையும் தப்பு தப்பா பேசிய சசிகலா புஷ்பா இவர வீட்டுல வந்து சந்திச்சாங்க... யாரைக்கேட்டு சந்திச்சாரு? இதெல்லாம் நீங்க கேக்கவே மாட்டீங்களா? என்னென்னமோ செஞ்சிட்டு இருக்காரு  என கொட்டித்தீர்த்தாராம்.

இதனையடுத்து பேசிய சசிகலா ‘நமக்குள்ள ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்க வேண்டாம். அவன் என்னமோ செஞ்சிட்டுப் போறான் விடு... நீ அவன் சொல்றத கொஞ்சம் கேட்டு நடந்துக்கோ, எனக்கும்கூட அவரு செய்யுறது பிடிக்கலை. ஊரு இரண்டுபட்ட கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு சொல்ற மாதிரி, இப்போ நாம அடிச்சுகிட்டா, அது எதிராளிகளுக்குக் கொண்டாட்டமாகிடும். அதனால அவரு என்னமோ பண்ணிட்டுப் போகட்டும். நம்ம டிவியில எப்பவும் போல அவரைப் பத்தி செய்தி போடுங்க. அவரு கேட்டா பணம் கொடுத்தனுப்பு. அவரு சொல்றதைக் கேட்டு நடந்துக்கோ.ன்னு அட்வைஸ் பண்ணாராம்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!