கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஐஜி விசாரித்த நிலையில்,சிபிசிஐடிக்கு மாற்றி கூடுதல் கண்காணிப்பாளர் ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரியை நியமித்தது ஏன் என கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பினார்.
கொடநாடு கொலை- உண்மை வெளியே வரும்
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களை அவரின் கட்சியின் முதலமைச்சராக இருந்தவரே மறைக்க முற்படுகிறார். அப்படி நடக்கும் போது திமுக எப்படி சும்மா இருக்க முடியும்?; உறுதியாக சொல்கிறேன் சிபிசிஐடி விசாரணையில் உண்மை வெளிவரும் என தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை பொதுச் செயலாளருமான கே பி முனுசாமி, கோடநாடு கொலை வழக்கு சம்பவம் தொடர்பாக ஐஜி தலைமையிலான விசாரணை 90% முடிந்துள்ள நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு திமுக அரசு மாற்றியது ஏன் என கேள்வி எழுப்பினார்.
Karnataka Elections: ஓபிஎஸ் வேட்பாளர்களின் வேட்புமனு நிராகரிப்பு.. இபிஎஸ் வேட்பாளரின் நிலை என்ன?
அதிமுகவை மிரட்டுவதா.?
கோடநாடு விவகாரத்தில் பல்வேறு தவறான தகவல்களை சட்டப்பேரவையில் முதலமைச்சர் அளித்து வருவதாக குறிப்பிட்டவர், ஐஜி விசாரித்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி கூடுதல் கண்காணிப்பாளர் ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரியை நியமித்தது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார். கோடநாடு வழக்கை காட்டி திமுக, அதிமுகவை மிரட்ட பார்ப்பதாகவும் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் கொலை கொள்ளை சம்பவங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்து வருவதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஆதாரத்துடன் கூறி இருக்கிறார். அந்த ஆதாரம் காவல்துறை மானிய கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரே அளவு கொலை நடைபெற்றுள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அலுவலகம் மீது தாக்குதல்
மூன்று ஆண்டுகளில் ஒரே அளவான கொலை கொள்ளை சம்பவங்கள் தான் நடைபெற்றுள்ளதா என கேள்வி எழுப்பினார். இந்த குறிப்பின் மூலம் தமிழக அரசு கொலைகளை கூட மறைத்து வருவதாக குற்றம் சாட்டினார். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் திமுக இரண்டாக பிரிந்தபோது மிகப்பெரிய கூட்டத்துடன் வைகோ அறிவாலயத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஜெயலலிதா அவர்கள் வேறு வழியில் திருப்பி காவல்துறை மூலம் நடவடிக்கை எடுத்தார். ஆனால் அதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறை வேடிக்கை பார்த்ததாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.
இதையும் படியுங்கள்